ரெனால்ட்ஸ் பேனாவில் "045" என்றால் என்ன? இனி நீல நிற மூடி பேனா தயாரிப்பு நிறுத்தம்?
சென்னை: நீல நிற மூடி கொண்ட ரெனால்ட்ஸ் பேனாக்களின் தயாரிப்பை நிறுத்த போவதாக வெளியான தகவலை அடுத்து அந்த பேனா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி பேனா தயாரிப்பு நிறுவனம் ரெனால்ட்ஸ். இந்த நிறுவனம் பல மாடல் பேனாக்களை தயாரித்துள்ளன. ஆனாலும் எல்லாவற்றையும்விட 1990களில் மிகவும் பிரபலமானது நீல நிற மூடி கொண்ட வெள்ளை நிற பேனா.

நீல நிறம் என்றால் நீல நிறத்தில் எழுதும், சிகப்பு என்றால் சிகப்பு நிறம், கருப்பு, பச்சை ஆகிய நிறங்களில் இருந்தன. இது பால் பாயிண்ட் பேனா. இதில் எழுதினால் கையெழுத்து அழகாக இருக்கும். இதில் ரெனால்ட்ஸ் 045 பால் பாயிண்ட் என எழுதியிருக்கும்.
1945 ஆம் ஆண்டு முதல் இந்த பேனா நிறுவனம் தயாரிப்பில் இருப்பதால்தான் இதில் 045 என எழுதப்பட்டுள்ளது. இந்த பேனா சச்சின் டெண்டுல்கர் பேனா என்றும் அழைக்கப்படுகிறது. 90ஸ் கிட்ஸ்களின் பேரவரைட்டாக இருந்தது. இந்த பேனாவின் விலை அதிகபட்சமாக 5 ரூபாய் வரை விற்பனையானது. இந்த நிலையில் இந்த பேனாக்களை ரெனால்ட்ஸ் நிறுவனம் நிறுத்த போவதாக தகவல் வெளியானது.
இன்றளவும் அந்த பேனாவை பலர் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த பேனாவை நிறுத்துவதாக வந்த தகவலால் அவர்கள் அந்த பேனா குறித்து பழைய கால நினைவுகளை பகிர்ந்துள்ளார்கள். இந்த தகவல் குறித்து ரெனால்ட்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதில் 045 ரெனால்ட்ஸ் பால் பாயிண்ட் பேனாக்களின் தயாரிப்பை நிறுத்தவில்லை. நாங்கள் நிறுத்த போவதாக சமூகவலைதளங்களில் வந்த தகவல்களும் உண்மையில்லை. 45 ஆண்டுகளாக இந்தியாவில் ரெனால்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்து தரத்திற்கும் புதுமைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்தியாவில் பேனா தயாரிப்புகளை மேலும் விரிவாக்க வலுவான திட்டத்தையும் வகுத்துள்ளோம்.
எனவே பேனாக்கள் குறித்த துல்லியமான தகவல்களை பெற எங்கள் இணையதளம் மற்றும் சமூகவலைதள பக்கங்களை பின்தொடருங்கள். உங்கள் நம்பிக்கையை நிலைநிறுத்துவதுதான் எங்களுக்கு முக்கியம். ஆதரவு கொடுத்ததற்கு நன்றி என அந்த அறிக்கையில் ரெனால்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீல நிற மூடி கொண்ட ரெனால்ட்ஸ் பேனாக்களை நிறுத்த போவதில்லை என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதால் பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications