Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்கள் ஓய்வூதியம் அழியப்போகிறது.. மிடில் கிளாஸ்களுக்கு செக்.. பிரபல வல்லுநர் அதிர்ச்சி வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர், பிரபல எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, மீண்டும் ஒருமுறை உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்த தனது எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு "உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய சரிவு" நிகழும் என்றும், இது "பூமர்" தலைமுறையின் ஓய்வூதியச் சேமிப்புகளை அழித்துவிடும் என்றும் அவர் கணித்துள்ளார்.

X தளத்தில், கியோசாகி தனது கணிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதில், பணம் போன்ற மாற்றம் அடையக்கூடிய, மதிப்பு குறையக்கூடிய சொத்துக்களை கைவிட்டு, உண்மையான சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக, வெள்ளியும் பிட்காயினும் நல்ல பலனை கொடுக்கும். இதுதான் உங்களுக்கு எதிர்காலம்.

gold rate Bitcoin

ரிச் டாட் புவர் டாட் ஆசிரியர் எச்சரிக்கை

இப்போது நிலவும் பணவீக்கம் இப்படியே போனால் பேபி பூமர் சமுதாயம் காலியாகிவிடும. பேபி பூமர் ஓய்வூதியங்கள் அழிக்கப்படும். பல பூமர் தலைமுறையினர் வீடற்றவர்களாக மாறுவார்கள் அல்லது தங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தை உருவாக்க முடியாமல் போய்விடும். இது வருத்தமளிக்கிறது. ஆனால் அதுதான் உண்மை, என்று குறிப்பிட்டுள்ளார். வரவிருக்கும் சரிவு பாரம்பரிய சேமிப்புகள் மற்றும் ஓய்வூதியக் கணக்குகளை சீர்குலைக்கும், பலரை ஏழையாக்கும். மெதுவாக உயர்ந்து முன்னேறியவர்கள் மீண்டும் மோசமான பொருளாதாரத்திற்கு செல்வார்கள், என்றும் எச்சரித்தார்.

உலக வரலாற்றில் மிகப்பெரிய சரிவு வரவிருக்கிறது என்று நான் எனது புத்தகத்தில் கணித்தேன். அந்த சரிவு இந்த ஆண்டு நடக்கும். சேமிப்பாளர்கள் நஷ்டமடைபவர்கள் .பணவீக்கம் சேமிப்பாளர்களின் பணத்தை குப்பையாக மாற்றிவிடும். இதற்கு மாற்றாக, தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் எத்திரியம் போன்ற பௌதீக மற்றும் டிஜிட்டல் சொத்துக்களை முதலீட்டாளர்கள் வாங்கி குவிக்க வேண்டும். அது மட்டுமே சரிவை சமாளிக்க உதவும்.

தற்போது வெள்ளி மற்றும் எத்திரியம் சிறந்த மதிப்புடைய முதலீடாக உள்ளது. பணம் போன்ற மதிப்பு இழக்க கூடிய சொத்துக்களை சேமிக்க வேண்டாம் என்று நான் நீண்டகாலமாக எச்சரித்து வருகிறேன். உண்மையான சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள். வெள்ளி மற்றும் எத்திரியம் வெறும் மதிப்பின் சேமிப்புக் கருவிகள் மட்டுமல்லாமல், தொழில்துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் அவை பெரிதும் பயன்படும்.

Rich Dad Poor Dad எச்சரிக்கை

என்னிடம் ஏற்கனவே நிறைய வெள்ளி உள்ளது. வெள்ளி தங்கம் கொஞ்சம் இருந்தாலும் சேமித்து வையுங்கள். அதுதான் முக்கியம். வெள்ளியில் முதலீடு செய்ய நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டியதில்லை. உலகில் உள்ள அனைவராலும் குறைந்தபட்சம் 1 அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும். வெள்ளி வாங்க வாங்க உங்கள் வாழ்க்கை மாறும். போலியான காகிதப் பணத்தைச் சேமிப்பதை விட வெள்ளியைச் சேமியுங்கள். தங்கம், சில்வர் மற்றும் பிட்காயின் ஆகியவற்றில் ஒன்றில் முதலீடு செய்பவர்களே புத்திசாலிகள்.

முட்டாள்களாக இருக்காதீர்கள். தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் சேமிக்கவும், உலகில் 1930ல் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவை தொடர்ந்து அடுத்த மோசமான சரிவு நடக்க போகிறது. கிட்டத்தட்ட இந்த நூற்றாண்டில் அடுத்த பெரிய சரிவாக இருக்க போகிறது. ஆனால் இந்த சரிவை பார்த்து அச்சம் அடைய கூடாது. இந்த சரிவை நீங்கள் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். பிட்காயின் சரிந்தால் அதை பார்த்து கண்ணீர் விடாமல் கூடுதலாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தங்கள் விலை சரியும். அது சரிந்தாலும் கூடுதலாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள், என்று Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+