தமிழகத்தின் நம்பர் 1 கோடீஸ்வர வேட்பாளர் விஜய் இல்லை.. ₹5,800 கோடி உடன் முந்திய அதிமுக வேட்பாளர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலை ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்ட்டில் விஜய் முதலிடத்தில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் முதலிடத்தில் இல்லை.. மாறாக அதிமுக வேட்பாளர் ஒருவரே முதலிடத்தில் இருக்கிறார்.

தமிழகத்தில் தேர்தல் ஜுரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வேட்புமனுத் தாக்கல், அனல் பறக்கும் பிரச்சாரம் எனத் தமிழகமே அனல் பறக்கிறது. வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில், அவர்களின் கல்வித் தகுதி மற்றும் குற்றப் பின்னணியைத் தாண்டி, மக்கள் ஆவலோடு கவனிப்பது அவர்களின் சொத்து மதிப்பு தான்.

Richest Candidates in Tamil Nadu Election tamil nadu assembly election 2026 Vijay AIADMK

கோடீஸ்வர வேட்பாளர்கள்

இந்த முறை தேர்தல் களத்தில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்குப் பஞ்சமே இல்லை. பல நூறு கோடிகளைச் சொத்தாகக் காட்டியுள்ள வேட்பாளர்கள் மத்தியில், சிலரின் சொத்து மதிப்பு மலைக்க வைக்கிறது. அப்படி கோடீஸ்வர வேட்பாளர்களாகக் களத்தில் இருப்போர் குறித்த லிஸ்ட்டை ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது.

விஜய் முதலிடம் இல்லை

தமிழ்நாடு வேட்பாளர்களில் 981 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இதில் பலரும் விஜய் தான் அதிக சொத்து வைத்திருக்கும் வேட்பாளராக இருப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால், விஜய்க்கு முதலிடம் இல்லை.. அதிமுக வேட்பாளர் ஒருவரே முதலிடத்தில் இருக்கிறார். விஜய் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், தவெகவின் ஆதவ் அர்ஜுனா 3வது இடத்தில் இருக்கிறார். தமிழகத் தேர்தல் களத்தில் கலக்கும் 'டாப் 10' பணக்கார வேட்பாளர்கள் குறித்துப் பார்க்கலாம்.

டாப் 10 இடங்கள்

10. ஆர்.எஸ். முருகன் (தவெக): திருநெல்வேலி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகக் களம் காண்கிறார் ஆர்.எஸ். முருகன். 58 வயதான இவரது சொத்து மதிப்பு ரூ.158+ கோடி.. தென்மாவட்டத்தின் முக்கியமான கோடீஸ்வர வேட்பாளர்களில் ஒருவராக இவர் இடம்பிடித்துள்ளார்.

9. கே. நித்தியானந்தன் (திமுக கூட்டணி - கொமதேக): பொள்ளாச்சி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கே. நித்தியானந்தன், கொமதேக கட்சியைச் சேர்ந்தவர்.. 54 வயதான இவரது சொத்து மதிப்பு ரூ.170+ கோடி ஆகும்.

8. கே.ஆர். ஜெயராம் (அதிமுக): கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம். ஜெயராம் சொத்து மதிப்பு ரூ.172+ கோடி என அவர் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக- அதிமுக

7. வி.ஜி. ராஜேந்திரன் (திமுக): திருவள்ளூர் தொகுதியில் மீண்டும் களம் காணும் திமுகவின் வி.ஜி. ராஜேந்திரன், கல்வி மற்றும் கட்டுமானத் துறையில் பிரபலமானவர். 58 வயதான இவரது சொத்து மதிப்பு ரூ.259+ கோடி ஆகும்.

6. டி. மதியழகன் (திமுக): கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி. மதியழகன். 59 வயதான இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.304+ கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. கார்த்திக் மோகன் (திமுக): சென்னை வில்லிவாக்கம் தொகுதியின் திமுக வேட்பாளர் 45 வயதான கார்த்திக் மோகன். இவரது தந்தை எம்.கே. மோகன் தற்போதைய அண்ணா நகர் எம்.எல்.ஏ.! பாரம்பரியமான அரசியல் பின்னணி கொண்ட கார்த்திக் மோகனின் சொத்து மதிப்பு ரூ.346 கோடி ஆகும்.

4. இசக்கி சுப்பையா (அதிமுக): திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் இசக்கி சுப்பையா, கட்டுமானத் துறையில் பெரும் புள்ளி. 61 வயதான இவரது சொத்து மதிப்பு ரூ.419+ கோடி எனத் தாக்கல் செய்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா

3. ஆதவ் அர்ஜுனா (தவெக): மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஆதவ் அர்ஜுனா.. சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தான் பணக்கார வேட்பாளர் லிஸ்டில் 3வது இடத்தில் இருக்கிறார். தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பிரிவின் தலைவரான இவரது சொத்து மதிப்பு ரூ.534+ கோடி. லாட்டரி அதிபர் மார்டினின் மருமகனான இவர், தவெகவின் முக்கியத் தூணாகப் பார்க்கப்படுகிறார்.

Richest Candidates in Tamil Nadu Election tamil nadu assembly election 2026 Vijay AIADMK

விஜய்

2. விஜய் (தவெக): தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பல ஆண்டுகளாகத் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு ரூ.648+ கோடி ஆகும். இவர்தான் பணக்கார வேட்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

1. லீமா ரோஸ் (அதிமுக): திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள லீமா ரோஸ் மார்டின், ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். பிரபல தொழிலதிபர் மார்டினின் மனைவியான இவரது சொத்து மதிப்பு ரூ.5,863 கோடி. மற்ற அனைத்து வேட்பாளர்களையும் விடப் பல மடங்கு அதிகமான சொத்து மதிப்பை இவர் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+