ரூ. 3 லட்சம் கோடி சொத்து! முதல் இடத்தில் ஏழுமலையான்! பணக்கார கோவில்கள் பட்டியல்!
சென்னை: இந்திய அளவில் பணக்காரக் கோவில்கள் எவை? என்பது குறித்து பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்தியாவில் சமீப காலங்களில் மிக அதிக பொருள் செலவில் கட்டப்பட்டுள்ள கோவில் எது என்றால் அது ராமர் கோவில்தான். ஏறக்குறையை 1,800 கோடி ரூபாய் மதிப்பில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்திய அளவில் அதிக சொத்து மதிப்புள்ள கோவில்கள் பட்டியலை 'பிசினஸ் டுடே' ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதிக பக்தர்களின் வருகை, அதன் வருமானம் எனப் பல அம்சங்களைக் கணக்கில் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் மதுரையைச் சேர்ந்த மீனாட்சியம்மன் கோவில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் வருவாய் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ரூ.6 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஊர்களிலிருந்து ஒருநாளைக்கு இக்கோவிலுக்கு சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவதாகவும்

இதனைத் தொடர்ந்து சாய்பாபா கோயில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. இக்கோவிலில் மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ளது. இங்குள்ள சாய் பாபா சிலை அமர்ந்துள்ள தங்கச் சம்மானம் 94கிலோ எடையில் தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் இதற்கு நன்கொடை வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாபாவைத் தரிசிக்கத் தினந்தோறும் சுமார்25 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவதாகச் சொல்லப் பட்டுள்ளது.

இதற்கடுத்து 5வது இடத்தில் உள்ள கோயில் பஞ்சாப் பொற்கோயில். இது இந்திய அளவில் மிகப் பிரபலமானது என்பது பலரும் அறிந்ததே. சீக்கியர்களின் புனித ஸ்தலமான இதன் ஆண்டு வருவாய் எவ்வளவு தெரியுமா? சுமார் 500 கோடி. இங்குள்ள கோவில் தங்க மேற்கூரையானது 400 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணக்கார கோவில்கள் பட்டியலில் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வங்கியில் மட்டும் வைப்புத் தொகையாக ரூ.1,737.04 கோடி உள்ளது.
இது அசையும் சொத்து. இதற்கு அசையா சொத்தாக 271.5 ஏக்கர் நிலம் உள்ளது. இது கேரளாவில் உள்ள பழமையான கோவில். சுமார் 100 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டது. ஆனால், அங்கே உள்ள சாமி சிலை 500 ஆண்டு பழமையானது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் உள்ள கோயில் இந்தியாவின் தலை பகுதியில் அமர்ந்துள்ளது. புரியவில்லையா? ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு வைஷ்ணோ தேவி கோவில்தான் அது. இக்கோவில் கடல் மட்டத்திலிருந்து 5200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி ரொக்கம். இதற்குச் சொந்தமாக 1800 கிலோ தங்கம் உள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள கோவிலை நீங்கள் தரிசிக்க வேண்டும் என்றால் அப்படியே கீழே இறங்கி தென் மாநிலமான கேரளாவின் தலைநகரத்திற்கு வரவேண்டும்.

ஆம்! திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயில்தான் 2வது இடத்தில் இருக்கிறது. இதன் சொத்து மதிப்பைக் கேட்டால், தலையே வெடித்து விடும். ரூ.1.20 லட்சம் கோடி இதன் சொத்து மதிப்பு என்றால், மலைப்பு வருமா வராதா?

கடைசியாக முதல் இடத்தில் உள்ள கோவிலுக்கு வருவோம். அது வேறு ஏதுவாக இருக்க முடியும்? இந்தியாவிலேயே பணக்கார சாமி எனச் சொல்லப்படும் திருப்பதி ஏழுமலையான் தான் முதல் இடத்தைப் பிடித்து உயரத்தில் இருக்கிறார். இதன் சொத்து மதிப்பு ரூ.3 லட்சம் கோடி. கேரளாவைவிட மாஸ் காட்டுகிறது ஆந்திரா.
இந்தக் கோவிலுக்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications