Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரள் நிதி சிக்கல்..சீமானுக்கு போட்டியாக மாவீரர் நாள்! தகிக்கும் செந்தமிழன்..தூண்டும் திராவிட கட்சி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து அதிருப்தி காரணமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து கொத்துக் கொத்தாக நிர்வாகிகள் வெளியேறி வருவது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் சீமானுக்கு போட்டியாக 'மாவீரர் நாள்' நிகழ்ச்சியை நடத்த 'மாஜி' நிர்வாகிகள் திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவல் சீமான் தரப்பை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் தேசியம், இலங்கை தமிழர் விவகாரம் ஆகியவற்றை முன்னெடுத்து அரசியல் செய்தவர்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிடத்தக்கவர். தொடர்ந்து பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது அவருக்கான தனி இடத்தை மக்களிடையே கொடுத்தது.

seeman ntk chennai

பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்தாலும், சீமான் பேசி வரும் அரசியல் காரணமாக பல இளைஞர்கள் அவர் பின்னால் அணிவகுத்தனர். ஆனால் காலமாற்றத்தில் சீமானின் பேச்சுகளும் மாற, இளைஞர் பட்டாளம் அதிமுக திமுக பக்கம் சாயத் தொடங்கியது.

தற்போது விஜயும் அரசியலில் குதித்து இருக்கும் நிலையில் சீமானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் திமுகவிலும் அதிமுகவிலும் இணைந்தனர். இதை அடுத்து ஏராளமான இளைஞர்கள் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலில் எட்டு சதவீதத்திற்கு மேல் வாக்கு கிடைத்ததோடு மாநில அங்கு கட்சியாக அங்கீகாரம் பெற்றது.

ஆனால் சீமானின் செயல்பாடுகள் காரணமாக நிறைய இளைஞர்கள் நிர்வாகிகள் தற்போது வேறு கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி பிரபாகரன், விழுப்புரம் வடக்கு சுகுமார், விழுப்புரம் மேற்கு பூபாலன், விழுப்புரம் மத்திய மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் , வீர தமிழர் முன்னணி அமைப்பின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், மேட்டூர் நகர துணை தலைவர் ஜீவானந்த, கோவை மாவட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகினர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலியில் நடந்த நாம் தமிழர் ஆலோசனைக் கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை கூறிய நிர்வாகிகளை 'வெளியே போ' என சீமான் கூறியதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியினரை மதிப்பதில்லை, பணம் உள்ளவர்கள், ஜால்ரா போடுபவர்களுக்கே கட்சியில் முன்னுரிமை என சீமானுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர் அக்கட்சியினர்.

இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி சிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சி ஆண்டு நடத்தும் மாவீரர் தின பொதுக்கூட்டத்தை சீமான் தலைமையில் பிரம்மாண்டமாக நடத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் அதே நாளில் திருச்சியில் சீமான் கட்சிக்கு போட்டியாக மாவீரர் தின பொதுக்கூட்டத்தில் நடத்த அதிருப்தி நாம் தமிழர் மாஜி நிர்வாகிகள் திட்டமிட்டு இருக்கின்றனர். அந்த மாவீரர் தின பொதுக்கூட்டத்தில் சீமானுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்க மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறது அதிருப்தி மாஜி நிர்வாகிகள் குரூப்.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியினர் நடிகர் விஜயின் வரவால் வாக்கு வங்கி சரிந்து விடுமோ என பயந்து போய் இருக்கும் நிலையில் அதன் காரணமாகவே 'லாரியில் அடிபட்டு செத்துப் போவ; என தவெக தலைவர் விஜயை உக்கிரமாக பேசினார் சீமான். இதற்கிடையே தற்போது சொந்தக் கட்சியிலேயே நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது செந்தமிழனுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட 'திராவிட கட்சி' சீமான் தரப்பை குறி வைத்து காய்களை நகர்த்தி வருவதாகவும், அந்த கட்சிதான் இதற்கெல்லாம் காரணம் என்கின்றனர் சீமான் ஆதரவாளர்கள். தமிழக அரசியலில் பாதிக்கு பாதி பெண் வேட்பாளர்கள், ஓராண்டுக்கு முன்பே வேட்பாளர் அறிவிப்பு என தனித்து அரசியல் செய்து வருகிறார் சீமான். இதையெல்லாம் அந்த 'திராவிட கட்சியால்' சகிக்க முடியவில்லை. அதனால் தான் நாம் தமிழர் கட்சிக்குள் சில நிர்வாகிகளை தூண்டிவிட்டு குழப்பம் விளைவிக்கிறார்கள் என அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளனர் நாம் தமிழர் கட்சியினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+