திமுக கூட்டணியில் விழப்போகிறதா பெரிய ஓட்டை.. பாதை மாறும் விசிக, கம்யூனிஸ்டுகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணி கடந்த 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியது. அகில இந்தியா அளவில் இந்தியா கூட்டணி தோற்று ஆட்சியை பிடிக்க முடியாமல் போனாலும், தமிழகத்தில் வலுவாக இந்தியா கூட்டணி இருப்பதற்கு கூட்டணி மிக முக்கிய காரணம் ஆகும். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்டுகள் திமுகவிற்கு எதிராக களத்தில் இறங்கி போராட ஆரம்பித்திருப்பது, கூட்டணியில் பிளவை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஹரியானா மாநில தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கூட்டணி அமைத்து கட்சிகளை அரவணைத்து சென்றிருந்தால் நிச்சயமாக ஆட்சியை பிடித்திருக்கும் என்கிறார்கள். வெறும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளால் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தது.

tamil nadu politics mk stalin

ஹரியானா மாநிலத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி இப்போது உள்ளது வலுவாக இருந்திருந்தால், அதாவது மக்கள் நலக்கூட்டணியில் அன்று இருந்த விசிக, இடதுசாரிகள், மதிமுக, தேமுதிக, போன்றவை திமுக கூடடணியில் இருந்திருந்தால், திமுக அப்போது ஆட்சியமைத்திருக்கும். மிகக்குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் அப்போது பல தொகுதிகளில் வெற்றிகள் மாறி இருந்தன.

கூட்டணி கணக்கு வலுவாக இல்லாத காரணத்தால் தான் திமுக அப்போது தோற்றது. திமுக அதன்பிறகு உஷார் அடைந்து 2019ல் வலுவான கூட்டணி அமைத்தது. அந்த கூட்டணியில் பாரிவேந்தரை தவிர அனைவரும் இப்போது வரை தொடர்கிறார்கள். 2019 லோக்சபா தேர்தலிலும்,2019 சட்டசபை இடைத்தேர்தலிலும் பெரிய அளவில் திமுக வெற்றி பெற்றது. 2021 சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

2024 லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தொடர் வெற்றிக்கு பிரேக் போட எதிர்க்கட்சிகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. வியூகங்களும் அமைத்து செயல்பட்டு வருகின்றன. 2026 சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தால் வெற்றி உறுதி என்றே சொல்லும் அளவிற்கு 2024 ரிசல்ட் அமைந்திருந்தது. ஆனால் 2026 சட்டசபை தேர்தல் வருவதற்கு முன்பு கூட்டணிகள் உடையும் வாய்ப்பு அதிகரித்த படியே செல்கிறது. விசிக மற்றும் இடதுசாரிகள் திமுக அரசின் செயல்களுக்கு அண்மை காலங்களில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வேங்கை வயல் தொடங்கி, ஆட்சியில் பங்கு கேட்பது, மதுரையில் கொடி கம்பம் பிரச்சனை மற்றும் இறுதியாக மதுவிலக்கு மாநாடு நடத்தியது வரை எல்லா விஷயத்திலும் விடுதலை சிறுத்தைகள் தனது குரலை ஆளும் திமுக அரசுக்கு எதிராக வலுவாக பதிவு செய்து வந்திருக்கிறது. மேலும் மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்ற நிலைப்பாட்டிற்கு விசிக வந்துள்ளது.

அதேபோல் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியில் நிர்வாக தோல்வி என்றும் வெளிப்படையாக விமர்சித்துள்ளது. விசிகவில் திருமாவளவனுக்கு அடுத்தபடியாக இளம் தலைவராக உருவெடுத்து வரும் ஆதவ் அர்ஜூன் திமுகவை அண்மைக்காலங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் விஷயத்தில் திருமாவளவனும் மென்மையான போக்கையே கடைபிடிக்கிறார். திருமாவளவன் மற்றும் ஆதவ் அர்ஜூனுக்கு எதிராக திமுகவினரும் இணையதளங்களில் கடுமையான தாக்குதலை தொடங்கி உள்ளனர். மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே தான் உள்ளது.

இந்த பிரச்சனையின் தீவிரம் குறைவதற்கு முன்பு அடுத்ததாக சாம்சங் விவகாரத்தில் இடதுசாரிகளின் போராட்டம் திமுகவிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. சாம்சங் நிறுவனத்தில் சிஐடியு தொழிற்சங்கம் அமைப்பதற்கு சாம்சங் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுக அரசு இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாளித்து வருகிறது.

இது ஒருபுறம் எனில்,இடதுசாரிகளுக்கு எதிராகவும், கம்யூனிச சிந்தாந்தங்களுக்கு எதிராக இணையதளங்களில் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். காவல்துறையும் சாம்சங்கில் நடந்த இடதுசாரிகளின் போராட்டத்திற்கு எதிராக அதிரடியாக எதிர்வினை ஆற்றியது. இதனால் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள் கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து கூட்டணி கட்சிகளிடையே ஏற்படுள்ள அதிருப்தியை சரி செய்யாவிட்டால் கூட்டணியில் பெரிய ஓட்டை விழும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதுஒருபுறம் எனில் விஜய்யின் அரசியல் வருகை 2026 சட்டசபை தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறும் அரசியல் நிபுணர்கள், கூட்டணி கணக்குகள் விஜய்யை மையப்படுத்தி மாறும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் ஆகிய மூன்று கட்சிகளை திமுக எதிர்கொள்ள போகிறது. இந்த சூழலில் அவர்கள் அனைவரும் ஒற்றுபட்டாலோ, அல்லது திமுகவின் கூட்டணி உடைந்தாலே, நிச்சயம் திமுகவிற்கு சவாலாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+