பாஜகவில் திடீரென "ரைஸான" பழைய முகம்.. அண்ணாமலை இல்லாத நேரம் பார்த்து.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அட

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில் தமிழ்நாட்டு பாஜகவில் நடக்கும் சில விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அண்ணாமலை லண்டன் பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில் கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்ள ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டு இருக்கிறது

அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில்.. அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதே போல எஸ்ஆர் சேகர், கனகசபாபதி, சக்கரவர்த்தி, ராம.சீனிவாசன், முருகானந்தம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

annamalai

பழைய கை: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவில் பழைய மூத்த நிர்வாகியான எச். ராஜா கை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. உதாரணமாக நேற்று பேட்டி அளித்த எச். ராஜா, பழனியில் நடைபெற்றது முருகன் மாநாடு அல்ல; அது இந்து விரோத மாநாடு; முருகனை வைத்து தமிழ்நாட்டில் ஏமாற்று அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பேட்டி அளித்துள்ளார். இத்தனை நாட்களாக பெரிதாக பேட்டி கொடுக்காமல் அமைதியாக இருந்த எச். ராஜா திடீரென இப்படி பேட்டி அளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

அண்ணாமலை இருந்தவரை எச். ராஜா பெரிதாக எதுவும் பேட்டிகள் கொடுக்கவில்லை. சர்ச்சையாக பேசவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான், எச். ராஜா இப்போது பேசி உள்ளார். அதோடு சமீபத்தில் ஆளுநர் ஆர். என் ரவியை கூட எச். ராஜா சந்தித்தார். அண்ணாமலை இல்லாத நேரத்தில் இந்த சந்திப்பும் கூட கவனம் பெற்றது.

அண்ணாமலை எங்கே: எச். ராஜாவிற்கான நியமனத்தில் அண்ணாமலை தலையீடு இருப்பதாக கூறப்பட்டாலும்.. அண்ணாமலை இது தொடர்பாக இதுவரை எந்த விதமான போஸ்ட்டையும் செய்யவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வர தொடங்கி உள்ளன. பல்வேறு அரசியல் நிபுணர்கள் இது தொடர்பாக இணையத்தில் தகவல்களை வெளியிட தொடங்கி உள்ளன.

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்று உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 4 நாட்களுக்கு முன் லண்டன் சென்றார். எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் வழியாக லண்டன் சென்றார்.

அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில் அவரை வரவேற்று யாரும் புகைப்படங்களை வெளியிடவில்லை. பாஜக அதிகாரபூர்வ பக்கமோ, அண்ணாமலையே, இந்த பயணம் பற்றிய புகைப்படங்களை வெளியிடவில்லை. சர்வதேச அரசியல் என்ற படிப்பை படிக்க அண்ணாமலை சென்றுள்ளார். அது சான்றிதழ் படிப்பு. சில மாதங்கள் அங்கு தங்கி படிக்க வேண்டும்.

குழப்பம்: இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலைக்கு இந்த முறை தேர்வாகி உள்ளார். இதற்காக அங்கே செல்லவும் அண்ணாமலை 4-5 மாதங்கள் அங்கேயே இருக்க உள்ளார்.

இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம்.. அவர் வெளிநாட்டில் இருக்கும் வரை தற்காலிக தலைவர் கொண்டு வரப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. அண்ணாமலை நேற்று முதல்நாள் வெளிநாடு செல்லும் முன்பும் கூட அதிமுகவை கடுமையாக தாக்கிவிட்டே சென்றார்.

எடப்பாடி குறித்து நான் விமர்சனம் வைத்ததில் தவறு இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். நான் என்னுடைய ஸ்டைலில் பேசினேன். நான் என்னுடைய ஸ்டைலில் விமர்சனம் வைத்தேன். இதில் எந்த தவறும் இல்லை. பழனிசாமி மீது நான் வைத்த விமர்சனம் 100 சதவீதம் சரி. நான் அவரை தற்குறி என்று கூறியதில் தவறு இல்லை.

முன்னாள் அமைச்சர்கள் என்னை தற்குறி என்று கூறலாம். நான் மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா? என்று போகிற போக்கில் அண்ணாமலை கேட்டுவிட்டு சென்றுள்ளார்.

தலைவர் பதவி: இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம்.. அவர் வெளிநாட்டில் இருக்கும் வரை தற்காலிக தலைவர் கொண்டு வரப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. அவர் தலைவர் பதவியில் இருந்தே கூட மாற்றப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது தலைமை பதவி மாற்றம் தொடர்பான கேள்விக்கு சமீபத்தில் செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார்.

அதில்,.. பாஜகவில் அனைத்திற்கும் முறை இருக்கிறது. அண்ணா இன்னும் டைம் இருக்கு.. நான் ஒரு அடிப்படை தொண்டன்.. அதன்படியே செயல்படுவேன். கட்சி தலைமைதான் முடிவுகளை எடுக்கும். கட்சியின் வளர்ச்சிக்காகவே நாங்கள் செயல்படுகிறோம். அதற்காகவே .. அதை நோக்கியே செல்கிறோம், என்று அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+