Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

E20 பெட்ரோலை போடலாமா? Unleaded Petrol-லுடன் எப்படி வேறுபடுகிறது? Explainer

Subscribe to Oneindia Tamil

சென்னை: எரிப்பொருள் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுவதை யாரும் நிறுத்தியபாடில்லை. சாதா பெட்ரோல், ஸ்பீடு பெட்ரோல் என வகை வகையாக வந்துவிட்டது. பொருட்களின் தேவை அதிகரிக்க அதிகரிக்க அதில் கலப்படங்கள் இருக்கும் அபாயமும் உள்ளது.

What is E20 Petrol

தற்போது புதிதாக E20 ரக பெட்ரோல் வந்துள்ளது. அதாவது 20 சதவீதம் எத்தனாலும் 80 சதவீத பெட்ரோலும் இருக்கும். இது சாதா பெட்ரோலைவிட விலை குறைவு. இந்த E20 ரக பெட்ரோலை 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் அமல்படுத்தப் போவதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதனால் ஏறக்குறைய நிறைய பெட்ரோல் பங்க்களில் இ20 பெட்ரோல்தான் விநியோகம் செய்கிறார்கள். இந்த பெட்ரோலிலும் கலப்படம் என சொல்வதை கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.

இதுகுறித்து ஒன் இந்தியா யூடியூப் சேனல் எடுத்த பேட்டியை பார்ப்போம். இந்த பேட்டியில் பெட்ரோல் பங்க் ஊழியர் கூறுகையில், முன்பு தயார் செய்யப்பட்ட வாகனங்களில் unleaded petrol only என குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் இப்போது வரும் பிஎஸ் 6 வாகனங்களுக்கு இ20 பெட்ரோல் மட்டும் என குறிப்பிட்டுள்ளார்கள் என்றார்.

இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் கூறுகையில், கச்சா எண்ணெய்யில் இருந்து எடுக்கப்படும் 80 சதவீதம் பெட்ரோலுடன் இயற்கையாக கரும்புகளில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் 20 சதவீதம் என இரண்டையும் சேர்த்து இ20 பெட்ரோல் வருகிறது.

வாகனங்கள் கார்பன் மோனாக்ஸைடு வாயுவை வெளியேற்றுவதால் காற்று மாசடைகிறது. ஆனால் எத்தனால் 20 சதவீதம் கலப்பதால் அது காற்று மாசை நிறைய ஏற்படாமல் தடுக்கிறது.

எத்தனால் கலக்கும் பெட்ரோலில் தண்ணீர் அடியில் தேங்கிவிடுகிறது. இதனால் நீங்கள் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது என்ஜினுக்குள் தண்ணீர் சென்று ஆஃப் ஆகிவிடுகிறது. தண்ணீர் உள்ளே சென்றுவிட்டால் வாகனத்தை ஸ்டார்ட் செய்யாமல் உடனடியாக டேங்கை கிளியர் செய்துவிட வேண்டும் என தெரிவித்தார். மேலும் பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ள யூடியூப் லிங்கை பார்க்கவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+