Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 வயது குழந்தைக்கு கூட தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை! அதிகரித்த குற்றங்கள்! திமுக நிர்வாகி கொடூரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "வளர்ந்த மாநிலம்", 'அமைதிப் பூங்கா' என்றெல்லாம் அழைக்கப்படும் தமிழகத்தில், இன்று பிஞ்சு குழந்தைகளின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது. சமீபத்தில் கிருஷ்ணகிரியில் அரங்கேறிய அந்த 'பயங்கரம்' ஒட்டுமொத்த தமிழகத்தின் மனசாட்சியையும் உலுக்கியெடுத்துள்ளது. திமுக அரசு சட்ட ஒழுங்கில் மோசமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் புகார்களை உறுதி செய்யும் விதமாக இந்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

DMK

கிருஷ்ணகிரி: போலி முகாமும்... புதைக்கப்பட்ட நீதியும்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஒரு தனியார் பள்ளியில் நடந்த அந்த 'போலி என்.சி.சி (NCC) முகாம்' சாதாரணமான ஒன்றல்ல. வெறும் பயிற்சியாளர் என்ற போர்வையில் நுழைந்த சிவராமன் என்பவர், பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது தமிழகமே அதிர்ந்தது. இதில் கொடுமை என்னவென்றால், தவறு நடப்பது தெரிந்தும் அந்தப் பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள், புகார் அளிக்காமல் மறைக்க முயன்றதுதான்.

தற்போது அந்தச் சிவராமன் சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டார். ஆனால், அந்தப் பிஞ்சுகளின் மனதில் விழுந்த வடு மாறுமா?

அஞ்செட்டி: இரண்டரை வயதுக் குழந்தையின் துயர மரணம்

இன்னொரு பக்கம், கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே இரண்டரை வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சம்பவம் மனசாட்சியுள்ள எவரையும் உறங்க விடாது. வலிப்பு வந்து குழந்தை இறந்துவிட்டதாகத் தாய் நாடகமாடிய நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கைதான் அந்தப் பிஞ்சு உடலில் நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியது. தாயுடன் பழகி வந்த பெரியநாயகம் என்ற 40 வயது நபர்.. திமுக இளைஞரணி கிளைச் செயலாளர் பெரியநாயகம் அந்தச் சின்னஞ்சிறு குழந்தையைச் சிதைத்துக் கொன்றது அம்பலமாகியுள்ளது. திமுக இளைஞரணி கிளைச் செயலாளர் பெரியநாயகம் இந்த வழக்கில் கைதாகி உள்ளார். பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டிய தாயின் அருகிலேயே ஒரு குழந்தை வேட்டையாடப்பட்டது சமூகச் சீரழிவின் உச்சம். அதும் ஒரு ஆளும் கட்சி நிர்வாகியால்!

இது ஒரு தனிப்பட்ட குற்றவாளியின் செயல் மட்டும்தானா அல்லது தமிழக அரசின், சட்ட ஒழுங்கின் தோல்வியா?

புள்ளிவிவரங்கள் சொல்லும் அதிர்ச்சி: எகிறும் போக்சோ (POCSO) வழக்குகள்!

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எந்தளவுக்கு அதிகரித்துள்ளன என்பதை இந்த அரசுப் புள்ளிவிவரங்களே அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகின்றன:

2020: 3,090 வழக்குகள்

2021: 4,465 வழக்குகள்

2022: 6,580 வழக்குகள்

2023: 6,968 வழக்குகள்

மூன்றே ஆண்டுகளில் சுமார் 61% உயர்வு என்பது சாதாரணமானதல்ல. 'விழிப்புணர்வு பெருகிவிட்டதால் தான் வழக்குகள் அதிகமாகப் பதிவாகின்றன' என்று அரசுத் தரப்பில் சமாதானம் சொன்னாலும், நிதர்சனத்தில் குழந்தைகள் மீதான குற்றச்செயல்கள் குறையவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

அதிகார நிழலில் குற்றவாளிகள்? - தி.மு.க.வினரின் தலையீடு!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஆளுங்கட்சியினரின் பெயர்கள் அடிபடுவதுதான் வேலியே பயிரை மேயும் கதையாக இருக்கிறது.

கிருஷ்ணகிரி விவகாரம்: இந்த விவகாரத்தில் கைதான முக்கியப் புள்ளிகள் மற்றும் அவர்களுக்குத் துணையாக நின்றவர்கள் உள்ளூர் தி.மு.க புள்ளிகளுடன் நெருக்கத்தில் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

விழுப்புரம் & திருச்சி: சமீபத்தில் விழுப்புரத்தில் பெண் ஒருவரை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒரு தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்டார். அதேபோல் திருச்சியிலும் ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடுமையில் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் தலையீடு இருந்ததாகப் புகார்கள் பறக்கின்றன.

கட்சித் தலைமை "யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சொன்னாலும், களத்தில் உள்ள காவல் துறையினரோ, "ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் சம்பந்தப்படும்போது சட்டத்தின் கைகள் கட்டப்படுகின்றன" என்று ரகசியமாகப் புலம்புகிறார்கள்.

கேள்விக்குறியாகும் பாதுகாப்பு!

போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரிப்பு, ஆன்லைன் சீரழிவுகள் ஒருபுறமிருக்க, அரசியல் பலம் கொண்டவர்கள் குற்றங்களில் ஈடுபடும்போது தப்பித்துவிடுவார்கள் என்ற எண்ணம் குற்றவாளிகளுக்குத் துணிச்சலைத் தருகிறது. தமிழகத்தின் 'திராவிட மாடல்' ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உண்மையான பாதுகாப்பு எப்போது கிடைக்கும் என்பதே சாமானிய மக்களின் தற்போதைய ஒற்றைக் கேள்வி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+