176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு
சென்னை: மதிமுக 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். முன்பு சீர்காழி தொகுதியில் தனி சின்னத்தில் மதிமுக வேட்பாளர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கும் உதயசூரியன் களமிறங்குகிறது. இதன் மூலம், உதயசூரியன் 176 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
3 தொகுதிகள் தவிர்த்து சீர்காழி (தனி) தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக மதிமுக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் மதிமுக வேட்பாளர் செந்தில்செல்வன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரதானமாக திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 164 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.
திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். தொடர்ந்து கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அந்த வகையில் மதிமுக வேட்பாளர்களை அறிவித்திருந்தது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மதிமுக வேட்பாளர்கள்
மதிமுக சார்பில் மொடக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன், மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரன், சீர்காழி (தனி) தொகுதியில் செந்தில் செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் சீர்காழி தொகுதியில் தனிச் சின்னத்தில் மற்ற 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் மதிமுக வேட்பாளர்கள் களம் காண்கின்றனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சீர்காழியிலும் உதயசூரியன் சின்னம்
இந்நிலையில், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சீர்காழி (தனி) தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டி எனத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அங்கேயும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி என வைகோ அறிவித்துள்ளார்.

தனி சின்னத்தை கேட்டு பெறுவதில் தாமதம் நிலவுவதால், தேர்தல் நெருங்கும் சூழலில் சின்னத்தை அறிமுகம் செய்து பிரச்சாரம் செய்வது கடினமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உதயசூரியன் சின்னத்தில் களம் காணும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு
காங்கிரஸ் - 28 தொகுதிகள் (கை சின்னம்)
தேமுதிக- 10 தொகுதிகள் (முரசு சின்னம்)
விசிக - 8 தொகுதிகள் (பானை சின்னம்)
இந்திய கம்யூனிஸ்ட் - 5 தொகுதிகள் (கதிர் அரிவாள் சுத்தியல்)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 5 தொகுதிகள் (அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்)
மதிமுக - 4 தொகுதிகள் (4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னம்)
மமக - 2 தொகுதிகள் (உதயசூரியன்)
ஐயூஎம்எல் - 2 தொகுதிகள் (ஏணி சின்னம்)
கொமதேக - 2 தொகுதிகள் (உதயசூரியன்)
முக்குலத்தோர் புலிப்படை - 1 தொகுதி (உதயசூரியன்)
மனிதநேய ஜனநாயக கட்சி - 1 தொகுதி (உதயசூரியன்)
தமிழர் தேசம் கட்சி - 1 தொகுதி (உதயசூரியன்)
எஸ்.டி.பி.ஐ - 1 தொகுதி (உதயசூரியன்)
மொத்தமாக உதயசூரியன் சின்னம் - 176 தொகுதிகள். 234 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 164 தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டவற்றில் 12 இடங்களில் உதயசூரியன் போட்டியிடுகிறது. மொத்தமாக 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னம் 176 இடங்களில் போட்டியிடுகிறது.
-
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications