இயற்கைக்கு மாறாக.. எவ்வளவு இழிவான செயல்.. ரிதன்யா - கவின் வழக்கில்.. வெளியான ஷாக் தகவல்!
சென்னை: ரிதன்யா வழக்கில்.. ரிதன்யாவிற்கு பாலியல் ரீதியாக அவரின் கணவர் கவின் கொடுமைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக கவின் அப்பாவிடம் இதை பற்றி மறைமுகமாக சொல்லியும் அவர்கள் வீட்டில் இதை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
ரிதன்யா தற்கொலை
ரிதன்யா தற்கொலை தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. ரிதன்யாவுக்கும், கவினுக்கும் 2025 ஏப்ரல் 11-ம் தேதி திருமணம் நடந்தது. ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் நகை மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வோல்வோ கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணமாகி முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்ததாகவும், மூன்றாவது வாரத்தில் இருந்து வாக்குவாதங்கள் தொடங்கியதாகவும் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அண்ணாதுரையும், ரிதன்யாவின் தாயாரும் தலையிட்டு ரிதன்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

கவின் அவ்வப்போது ரிதன்யாவைப் பார்க்க வந்துள்ளார்.கடைசியாக வீட்டிற்கு வந்த ரிதன்யா தனது கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். ஜூன் 28-ம் தேதி காலை 9.30 மணியளவில் ரிதன்யா தனது அப்பாவின் காரில் மொண்டிபாளையம் கோவிலுக்கு சென்றுள்ளார். காரிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்தியாவிற்கே பாடம்
இந்தியாவில் பலரின் குடும்பங்களுக்கு.. முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள பல குடும்பங்களுக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டு சென்று இருக்கிறது வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்ட ரிதன்யாவின் மரணம். அவர் தற்கொலை தானே செய்து கொண்டார்.. கொலையா என்று கேட்டால்.. ஆம் உண்மையில் அது தற்கொலைதான். ஆனால் இதை காலம்காலமாக நமது சமுதாயம் கடைப்பிடித்து வரும் பல பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் காரணமாக நடத்தப்பட்ட கொலை என்றுதான் சொல்ல வேண்டும்.
பாலியல் தொல்லை
ரிதன்யா வழக்கில்.. ரிதன்யாவிற்கு பாலியல் ரீதியாக அவரின் கணவர் கவின் கொடுமைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக கவின் அப்பாவிடம் இதை பற்றி மறைமுகமாக சொல்லியும் அவர்கள் வீட்டில் இதை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதாவது கவின் தனது மனைவியிடம் இயற்கைக்கு மாறாக உறவு கொள்ள வற்புறுத்தி இருக்கிறார். அதோடு நிற்காமல் சில இழிவான செயல்களை செய்யவும் வற்புறுத்தி உள்ளார். ஆனால் இதை பற்றி ரிதன்யா தனது மாமியார், மாமனாரிடம் மறைமுகமாக சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதோடு இல்லாமல் தனது தம்பியிடம் இதை பற்றி புகார் உள்ளார். உங்க மாமா தவறானவர் என்பது போல தம்பியிடம் மட்டும் கொஞ்சம் வெளிப்படையாக ரிதன்யா புகார்களை கூறி உள்ளார். ஆனால் அவர் சிறிய பையன் என்பதால் முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இதில் ரிதன்யா கணவர் கவின் மிக மோசமான மனநிலை கொண்டவராக இருப்பார் என்றும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது கவின் கடுமையான பாலியல் வறட்சி கொண்ட ஆள் போல செயல்பட்டதாக கூறப்படுகிறது. மனைவியை மன ரீதியாக மட்டுமன்றி உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. சில கடுமையான பாலியல் தொல்லைகளை கொடுத்ததாகவும்.. ஹாலிவுட் படங்களை பார்த்து அதில் உள்ள சில விஷயங்களை செய்ய சொல்லி வறுபுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. வாழ்க்கையில் இதுவரை வேலைக்கே செல்லாத கவின் வீட்டில் இருந்தபடியே இப்படி மோசமான குணம் கொண்டவராக மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications