ராமர் கோயில் வீடியோ..பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு எதிர்ப்பு! ரியாத் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டாராம்
சென்னை: ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு அதை போற்றி பேசி வீடியோ வெளியிட்ட பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு இணையத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அவர் தங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என ரியாத் தமிழ் சங்கம் அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் அனைவராலும் அறியப்படும் பிரபல பட்டிமன்ற பேச்சாளராக இருப்பவர் பாரதி பாஸ்கர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான இவர் பல்வேறு ஊர்கள், மாநிலங்கள், நாடுகளில் தமிழர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் இவர் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. ராமர் கோயிலுக்கு ஆதரவாக பாரதி பாஸ்கர் பேசியது கடுமையாக விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.

நெட்டிசன்கள் பாரதி பாஸ்கர் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் செயல்பட்டு வரும் பழமையான ரியாத் தமிழ் சங்கம் சார்பில் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி மாணவர் கலை விழா நடத்தப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் விளம்பரப் படத்தை பகிர்ந்து அவரை விழா ஏற்பாட்டாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்தன.

இந்த நிலையில் இன்று ரியாத் தமிழ்ச் சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக நடக்க இருந்த மாணவர் கலை விழாவில் பங்கு பெறுவதற்காக வருகை புரியவிருந்த திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் வர முடியாமல் போனமையால் ரியாத் தமிழ்ச் சங்கம் வேறு சில தமிழ் ஆளுமைகளை வைத்து குறிப்பிடப்பட்ட இடத்தில், நேரத்தில் இவ்வருடத்தின் மாணவர் கலைவிழாவை திட்டமிட்டபடி நடத்த இருக்கிறது.
அயலகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களின் கல்வி, கலைத் திறன், தனித் திறன், விளையாட்டு போன்றவைகளை ஊக்குவிக்கும் உயரிய நோக்கில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பெரும் திரளாக கலந்து கொண்டு நம் கண்மணிகளாம் தமிழ் மாணவ - மாணவிகளின் திறமைகளை காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications