சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவர் ஆகிறார் மூத்த விஞ்ஞானி அமுதா! பாலச்சந்திரன் இன்றோடு ஓய்வு
சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவராக, மூத்த விஞ்ஞானி அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.
34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் 7 மண்டல வானிலை ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தான் சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம். இந்த மையமானது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வானிலை தொடர்பான செயல்பாடுகளை கவனிக்கிறது.
தென்மண்டல வானிலை ஆய்வு மையம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது. ஹைதராபாத், பெங்களூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மூன்று வானிலை ஆய்வு மையங்கள் சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளன.
வானிலை மையத்தின் தலைவர்களாக இருப்பவர்கள் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் பிரபலம் ஆவது வழக்கம். பருவமழை காலங்களின்போது, பள்ளி விடுமுறை பற்றி தெரிந்துகொள்ள வானிலை அறிவிப்புகளை பார்க்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு வானிலை மைய தலைவர்கள் விருப்பமானவர்கள். அந்தவகையில், முன்னாள் தலைவர் ரமணன், பள்ளிக் குழந்தைகளால் கொண்டாடப்பட்டவர்.
இப்போது, தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்கிறார் அமுதா. கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமுதா, இனி, வானிலை சார்ந்த தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications