சாலை விபத்துகளுக்கு காரணமே வேற.. மதுவால் குறைவு தானாம்! போலீஸ் விளக்கத்துக்கு வெதர்மேன் பதில்
சென்னை: சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்படுவதற்கான காரணங்களை பட்டியலிட்டு இருக்கிறது சென்னை போக்குவரத்து காவல்துறை.
அதிகளவிலான சாலை விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த விபத்துகளுக்கான பிரதான காரணம் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, நீண்ட நேரம் வாகனம் ஓட்டி செல்வது, செல்போன் பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டுவது போன்றவை விபத்துக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டு உள்ளன.

அதேபோல் அதிவேகத்தில் தாறுமாறாக வாகனம் ஓட்டி செல்வது, தவறான பாதைகளில் செல்வது, சிக்னல் கொடுக்காமல் திரும்புவது, தவறான பாதையில் முந்தி செல்வது போன்றவற்றையும் சாலை விபத்துகள் ஏற்படுவதற்கான காரணமாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.
இவையெல்லாம் காரணமாக இருந்தாலும் இதில் எந்த காரணத்துக்காக விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன என்று சதவீத அடிப்படையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக 18 சதவீத விபத்துகள் வழி விட்டு செல்லும் போது ஏற்படும் தவறுகளால் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வலது பக்கத்தை தவறாக புரிந்துகொள்வதால் 17.8 சதவீத விபத்துகளும்,
மற்ற வாகனங்களின் பிழைகளால் 16 சதவீத விபத்துகள் ஏற்படுவதாகவும், தூர பிழைகளால் 14.9 சதவீத விபத்துகளும், முறையற்ற வேகத்தால் 14.1 சதவீத விபத்துகளும் ஏற்படுவதாக கூறப்பட்டு இருக்கிறது.
அதேபோல், பாதசாரிகளுக்கு வழிவிடாதது போன்றவற்றால் 5.3 சதவீத விபத்துகளும், சாலையை தவறாக பயன்படுத்துவதால் 4.1 சதவீத விபத்துகளும், முந்தி செல்லும்போது 3.4 சதவீத விபத்துகளும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் மதுவினால் ஏற்படும் விபத்துகள் குறைவாக நடைபெறுவதாக காட்டப்பட்டு உள்ளது. சதவீதத்தையும் குறிப்பிடவில்லை.
இதற்கு பதிலளித்து உள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புள்ள விவரமா அல்லது கடந்த ஆண்டின் விவரமா. எந்தெந்த காரணத்துக்காக விபத்துகள் ஏற்படுகின்றன என்பதையும் அறிமுகம் செய்ய வேண்டும். நம்பர் 8 - ஆபத்தான சாலை பள்ளங்கள், சாலை தடுப்புகள் இல்லாதது, எந்த பாதுகாப்பும் இன்றி சாலைகளில் தோண்டப்படும் குழிகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications