பல்லாவரத்தில் கர்ப்பிணியிடம் செயினை பறிக்க.. சாலையில் இழுத்து சென்ற கொள்ளையர்கள்.. பகீர் வீடியோ!
சென்னை: பல்லாவரத்தில் கர்ப்பிணியை சாலையில் இழுத்து சென்று செயின் பறிக்க கொள்ளையர்கள் முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகரை சேர்ந்தவர் கீதா (24). இவர் 8 மாத கர்ப்பிணி. நேற்று முன்தினம் வீட்டின் வாசலில் உள்ள பிள்ளையார் சிலையை சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிள் இருந்துகொள்ள ஒருவர் மட்டும் நடந்து வந்துள்ளார்.

போராடிய கர்ப்பிணி
அப்போது கீதா கழுத்தில் போட்டிருந்த 11 சவரன் தாலி செயினை பறிக்க முயன்றார். கீதா தாலி செயினை பிடித்து கொண்டு போராடினார். அப்போது கொள்ளையன் கீதாவை தரதரவென இழுத்து கொண்டு சாலையில் கொண்டுவந்து போட்டு செயினை பறிக்க முயன்றார்.

கேமரா
கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். கொள்ளையர்களிடம் செயினை காப்பாற்ற போராடிய கீதாவிற்கு கை கால்களில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. இதில் எடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

செயின் பறிப்பு
கொள்ளையர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் செயின் பறிக்க வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன. அந்த காட்சிகளை வைத்தே கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொள்ளையர்களை விரைவில் கைது செய்யவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"அவங்கள கடிச்சு வை" கைது செய்ய வந்த போலீஸ்காரரை அலறி ஓடவிட்ட கன்னியாகுமரி கிருஷ்ணவேணி! என்ன நடந்தது -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம்












Click it and Unblock the Notifications