ஜெயிலுக்கு எப்படி போறது.. பணத்தை பறிகொடுத்தவரிடமே வழி கேட்ட திருடர்கள்.. சென்னையில் கலகல!
சென்னையில் பணத்தை பறிகொடுத்த நபரிடமே, அவரிடம் கொள்ளையடித்த திருடர்கள் வழி கேட்டு மாட்டிக்கொண்டது வைரல் ஆகியுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னையில் பணத்தை பறிகொடுத்த நபரிடமே, அவரிடம் கொள்ளையடித்த திருடர்கள் வழி கேட்டு மாட்டிக்கொண்டது வைரல் ஆகியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே உள்ள புதுப்பட்டினத்தைச் சேர்ந்த அல்லா பாஷா என்பவரிடம் இருந்து நேற்று திருடர்கள் கொள்ளையடித்து இருக்கிறார்கள். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அல்லா பாஷா அவரது நண்பர்களுடன் படம் பார்த்துவிட்டு வரும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் தப்பி ஓடிய திருடர்கள் பூஞ்சேரி அருகே டீ குடித்தபடி நின்றுள்ளனர்.
அதே கடைக்கு டீ குடிக்க வந்துள்ளார் அல்லா பாஷா. இந்த நிலையில் அந்த திருட்டு கும்பல் அல்லா பாஷா மற்றும் அவரின் நண்பர்களிடமே சென்று, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வழி கேட்டு இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் தெரியாமல் வழி கேட்டுள்ளனர்.
உடனே சுதாரித்த அல்லா பாஷா அந்த திருடர்களை பிடித்துள்ளார். இரண்டு திருடர்கள் மட்டும் தப்பித்து ஓடி உள்ளனர். உனக்கு வழிதானே வேண்டும் வா போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்று வழி காட்டி இருக்கிறார் அல்லா பாஷா. அந்த திருடர்கள் பெருங்குடியை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
போலீசார் தற்போது இவர்களை விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications