வளசரவாக்கத்தில் கையில் நீர் சொம்புடன் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா.. கதறிய உறவுகள்.. குலுங்கிய சென்னை
சென்னை: ரோபோ சங்கரின் உடலுக்கு திரைப்பட கலைஞர்கள், டிவி பிரபலங்கள் உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் துவங்கியிருக்கிறது.. வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. இந்த இறுதி ஊர்வலத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, சொம்பில் நீருடன் நிலைகுலைந்து நடந்து சென்றது காண்போரை கலங்கடித்து வருகிறது.
ரோபோ சங்கரின் மரண செய்தி கேட்டதுமே திரையுலகினர் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டனர்.. இதையடுத்து, ரோபோ சங்கரின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் திரண்டு சென்று அஞ்சலி செலுத்த துவங்கிவிட்டனர்.

நேற்றிரவு மருத்துவமனையில் உயிரிழந்த ரேபாபோ சங்கரின் உடல், இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.. அப்போது உடலை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது சிலர் இடறினார்கள்.. இதைப்பார்த்து பதறிப்போன மகள் இந்திரஜா சங்கர், "அண்ணா ஏன் இப்படி பண்றீங்க? அப்பாண்ணா" என்று கண்ணீருடன் சொன்னார்..
இறுதிச்சடங்கு - சிவகார்த்திகேயன்
இதையடுத்து, வளசரவாக்கத்திலுள்ள அவரது வீட்டில் ரோபோ சங்கரின் உடல் அவர் வீட்டில் உறவினர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது..
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவே இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.. துணை முதல்வர் நேரடியாகவே சென்று அஞ்சலி செலுத்தினார்.. மேலும், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்டோர் ரோபோ சங்கரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் இருவரும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கமலின் தீவிர ரசிகர் ரோபோ சங்கர். ரோபோ சங்கர் மறைவுக்கு நேற்று முதல் ஆளாய் இரங்கல் தெரிவித்த கமல் இன்று அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
கமல் அஞ்சலி - கண்ணீர்
கமல் வந்ததை பார்த்து ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, அப்பா யார் வந்து இருக்கானு பாருப்பா.... என்று கதறிய காட்சிகள் அத்தனை பேரையும் கண்கலங்கச் செய்தது.
இன்று மாலை 4.30 மணிக்கு ரோபோ சங்கரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.. இதையடுத்து, பிற்பகல் 3 மணி அளவில் அவருக்கான இறுதி சடங்குகள் ஆரம்பமாகின.. அப்போது ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் தலையில் மல்லிகைப்பூ சூட்டி சடங்குகள் நடந்தன.. அந்த நேரத்தில் ரோபோ சங்கரை பார்த்து, மல்லிகைப்பூ மணக்குது சங்கரு என்று பிரியங்கா கதறி அழுது கூறியது காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது.
மகள் இந்திரஜா - சொம்பு நீர்
அதேபோல, மகள் இந்திரஜா தந்தையின் இறுதி ஊர்வலத்தில் சொம்பில் நீருடன் நடந்து சென்றதை பார்த்து பொதுமக்களும் கலங்கி போனார்கள்.. இதனை பிறந்த வீட்டு நீர் அல்லது நீர் மாலை தண்ணீர் என்றும் சிலர் சொல்வார்கள்.. உடல் அடக்கத்தின்போது, இந்த நீரை ஊற்றுவதும் சடங்காக உள்ளதாம்.
அந்தவகையில், சொம்பு நீருடன் மகள் இந்திரஜா இறுதிஊர்வலத்தில் கண்ணீருடன் நடந்து சென்றதை பார்த்து குடும்ப உறவினர்கள் கதறி அழுதனர்..
வீடியோ வைரல்
இதனிடையே, கடைசியாக ரோபோ சங்கர் கலந்துகொண்ட நிகழ்வில் அவர் செய்த செயல் குறித்து வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. சமீபத்தில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தியது தமிழக அரசு. இந்த விழாவில் கலந்துகொண்ட ரோபோ சங்கர் அங்கே இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்திடம் ஆசி பெற்றார். மேலும் தன்னுடைய ஆஸ்தான ஹீரோவான கமல்ஹாசனை சந்தித்த ரோபோ சங்கர் அவரிடம் ஆசி வாங்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications