Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Robo Shankar daughter: ரோபோ சங்கருக்கு மகள்னா உயிர்.. இந்திரஜா சங்கர்! பிகில் பாண்டியம்மா பற்றி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் நேற்று இரவு திடீரென உயிரிழந்தார். ரோபோ சங்கரை போலவே இந்திராஜா (Robo Shankar daughter) சங்கரும் சினிமா துறையில் நுழைந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இந்திராஜா, பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.

காமெடி நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. சின்னத்திரை மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையிலும் காமெடி நடிகராக கோலோச்சிய ரோபோ சங்கருக்கு படப்பிடிப்பில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

robo-shankar-daughter-indraja-shankar-and-the-star-who-shined-as-pandiyamma-in-bigil

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

ரோபோ சங்கர் மகள் யார்?

நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். தந்தை உயிரிழந்ததை கேட்டதும் மகள் இந்திராஜா கதறி அழுதார். ரசிகர்கள், உறவினர்கள், நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள் ரோபோ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் "ரோபோ சங்கர் மகள் யார்?" என்ற தேடல் அதிகரித்துள்ளது. அவரது மகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

ரோபோ சங்கரை போலவே இந்திராஜா சங்கரும் சினிமா துறையில் நுழைந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இந்திராஜா, பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். விஜய்யின் பிகில் படத்தில் இந்திராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிகில் திரைப்பட பாண்டியம்மா

கால்பந்து வீராங்கனையாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தார். பாண்டியம்மா என்ற அந்த கேரக்டர் பிகில் படத்தில் மட்டும் இன்றி வெளியிலும் பரவலாக புகழ் அடைந்தார். "குண்டம்மா குண்டம்மா" என்ற அந்த டயலாக்கை விஜய் பேசியதும், கோபத்தில் இந்திராஜா கோல் போடுவதும் போன்ற காட்சியும் பலரையும் கவர்ந்திருந்தது.

இந்திராஜாவின் நடிப்புத்திறன் மற்றும் அவரது தந்தையை போன்ற ஒரு தோற்றம் இந்திராஜா சங்கருக்கு பலமாக அமைந்தது. படிப்பை தொடர்ந்தபடியே இந்திராஜா நடிக்கவும் செய்தார். சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இந்திராஜா இருப்பார். அவ்வப்போது தனது வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் உள்ளிட்டவை குறித்தும் அடிக்கடி வலைத்தளத்தில் பகிர்வதை பார்க்க முடியும்.

பிரமாண்டமாக நடந்த திருமணம்

இந்திராஜாவுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. உறவினரும், இயக்குநருமான கார்த்திக்கையே கரம் பிடித்தார் இந்திராஜா. மதுரையில் பிரமாண்டமாக இந்த திருமணத்தை நடத்தி வைத்தார் ரோபோ சங்கர்.

இந்திராஜாவிற்கு கடந்த ஜனவரியில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு கமல்ஹாசன் "நட்சத்திரன்" என்று பெயர் சூட்டினார்.

தனது பேரன் நட்சத்திரனோடும் ரோபோ சங்கர் மகிழ்ச்சியாக விளையாடி வந்தார். பேரனை தூக்கி கொஞ்சி விளையாடிய வீடியோவும் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்தது ரசிகர்கள், நடிகர்கள் என பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரோபோ சங்கர் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்படுகிறது. தொடர்ந்து இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+