Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Robo Shankar death: அடக்கடவுளே.. இப்படியும் நடக்குமா? ஹீரோவாக நடித்த ரோபோ சங்கர்! முதல் படமே கடைசி படமான சோகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்யிருக்கும் நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர், ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்த முதல் படமே அவருக்கு கடைசி படமாக மாறியதாக ரசிகர்கள் வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர்.

மதுரையில் பிறந்த ரோபோ சங்கர், ஆரம்பத்தில் விஜய் டிவி, சன் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆக கலைவாழ்க்கையைத் தொடங்கினார். முன்னதாக அவர் ஒரு மேடைக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு வெள்ளித் திரையில் வாழ்க்கை கொடுத்தது கேப்டன் விஜய்காந்த் என்பது குறிபிடத்தக்கது. 1997ல் விஜயகாந்த் நடித்த தர்மச்சக்கரம் திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமானார் ரோபோ. பின்னர் 2007ல் ஜெயம் ரவி நடித்த தீபாவளி படத்தின் மூலம் திரையுலகில் மீண்டும் களம் இறங்கினார்.

Robo Shankar death

நடிகர் ரோபோ சங்கர்

பின்னர் விஜய் நடித்த புலி, அஜித் நடித்த விஸ்வாசம், தனுஷ் நடித்த மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தனித்துவமான காமெடி நடிப்பால் ரசிகர்களிடம் இடம்பிடித்தார். தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி கலைஞராக கலந்து கொண்டு பெரிய வரவேற்பைப் பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் திரும்பினார். ஆனால் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் சென்னையில் 'காட்ஜில்லா' படப்பிடிப்பில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார்.

ரோபோ சங்கர் மரணம்

உடனே அவர் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்பு காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு 8.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் கூறியதாவது, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவரை காப்பாற்ற முடியவில்லை. ரோபோ சங்கரின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரோபோ சங்கர் கடைசி படம்

இந்நிலையில், 2025 மே 9ஆம் தேதி வெளியான 'அம்பி' திரைப்படம் ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்த முதல் படம். அதுவே அவரின் கடைசி படமாகவும் அமைந்துள்ளது. எல்வின் இயக்கிய இந்த காமெடி-டிராமா படத்தில் அஸ்வினி சந்திரசேகர், ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ஹீரோவாக அறிமுகமான தருணத்தில் அவரை இழந்துவிட்டதாக ரசிகர்கள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.

திரையுலகம் இரங்கல்

ரோபோ சங்கரின் உடல் இன்று இரவு அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட உள்ளது. திரையுலகில் எப்போதும் சிரிப்பையும், உற்சாகத்தையும் பரிமாறிய நடிகர் ரோபோ சங்கரின் மறைவு, சினிமா துறைக்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் எளிதில் நிரப்ப முடியாத வெற்றிடமாகவே மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+