மைக் தூக்கி எறிந்த நிகழ்வு.. பார்த்திபன் போன் செய்தார்.. கண் கலங்கினேன்.. நடந்தது என்ன? ரோபோ சங்கர்
சென்னை: இரவின் நிழல் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்தது குறித்து ரோபோ சங்கருக்கு ஆர் பார்த்திபன் போன் செய்துள்ளார்.
இரவின் நிழல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது. இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டார். அவர் முதல் பாடலை வெளியிட்டார்.
இந்த படத்தை இயக்கியவர் ஆர் பார்த்திபன். நிகழ்ச்சியின் போது ஏ.ஆர் ரஹ்மான் பேசுகையில் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும்.

திரைக்கலைஞர்கள்
தமிழ் திரைக் கலஞைர்களிடம் பல திறமைகள் உள்ளன. நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்றார். அப்போது இயக்குநரும் நடிகுமான பார்த்திபன் பேசுவதற்கு முற்பட்டார். அப்போது அந்த மைக் கோளாறால் வேலை செய்யாமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் வேகமாக இருக்கையிலிருந்து எழுந்து சென்று அந்த மைக்கை வீசி எறிந்தார்.

தூக்கி எறிந்த மைக்
இதை சற்றும் எதிர்பார்க்காத ஏ.ஆர்.ரஹ்மான் சம்பவத்தை சுதாரிக்க சில நிமிடங்கள் ஆனது. அதிலும் பார்த்திபன் தூக்கி எறிந்த மைக், ரோபோ சங்கர் மீது விழுந்தது மேலும் சர்ச்சையானது. இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ரோபோ சங்கர் கூறுகையில் ஒட்டுமொத்த விழாவையும் பார்த்திபன் ஒருவர் மட்டுமே கவனித்து வந்தார்.

டென்ஷன்
மைக் பிரச்சினையானதால் அந்த நேரத்தில் சற்று டென்ஷனாகிவிட்டார். இதற்காக போனில் என்னிடம் பல முறை மன்னிப்பு கேட்டார். அவர் பேசியதை கேட்டு நானே கண் கலங்கி விட்டேன். அப்படி சொல்லாதீங்க, நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றேன். நிஜத்தில் பழகுவதற்கு இனிமையான நபர் பார்த்திபன்.
Recommended Video

புண்படுத்தாதவர்
யாரையும் புண்படுத்தாத ஒரு நல்ல மனிதர். இந்த படத்தில் நான் நடித்துள்ளேன். இந்த படம் ஒட்டுமொத்த விருதையும் குவிக்க போகிறது. உலகமே திரும்பி பார்க்க போகும் ஒரு படமாக இருக்க போகிறது என ரோபோ சங்கர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications