Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோபோ சங்கர், அவரது மகள் இந்திரஜாவுக்கு.. தமிழ்நாடு அரசு கொடுத்த மிகப்பெரிய கவுரவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2016-2022ம் ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைக்கலைஞர்களுக்கான விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இந்த பட்டியலில், மறைந்த ரோபோ சங்கர் மற்றும் அவரது மகள் இந்திரஜா இருவருக்கும் 2022ம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவை நடிகர், நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரோபோ சங்கருக்கு 'இரவின் நிழல்' படத்திற்காகவும், இந்திரஜா சங்கருக்கு 'விருமன்' படத்திற்காகவும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுகள் ரோபோ சங்கருக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.

Robo Shankar Tamil Nadu

விருது அறிவிப்பு

சமூக சிந்தனைகளுடன் கூடிய, மனித நல்லுணர்வை பிரதிபலிக்கும் திரை படைப்புக்களை கொண்டாடும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் சிறந்த திரைப்படங்கள், சிறந்த கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த நெடுந்தொடர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த 2016-2021 ஆம் ஆண்டுக்கான அரசு திரைப்பட விருதுகள் மற்றும் 2014-2022 ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுகளை அடுத்த மாதம் 13ஆம் தேதி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குவார்.

சிறந்த நடிகர்கள்

விருது பெறுவதற்கான பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா முரளி, லியோ மோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த படம்

மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சின்னத்திரை விருது

சின்னத்திரை விருதுகளுக்காக, நடிகர்கள் எம் ராஜ்குமார், ஆர் பாண்டியராஜன், கவுசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வா சஞ்சீவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக் ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத்திரையில் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். ஆர்.ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சிறந்த சின்னத்திரை நடிகைகளாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

  • அழகி
  • ரோமாபுரி பாண்டியன்
  • இராமனுஜர்
  • நந்தினி
  • பூவே பூச்சூடவா
  • செம்பருத்தி
  • இராசாத்தி
  • சுந்தரி
  • எதிர்நீச்சல்

ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகவும் தேர்வு செய்யபட்டிருக்கின்றன.

சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், 2ம் பரிசாக ரூ.1 லட்சமும், 3ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும் வழங்கப்படும். பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 லட்சம் வழங்கப்படும். சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப்பரிசும் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+