இறுதி சடங்கு செய்ய மொட்டை அடித்து வந்த ரோபோ சங்கர் மாப்பிள்ளை கார்த்திக்! கதறிய பிரியங்கா
சென்னை: நடிகர் ரோபோ சங்கருக்கு இறுதி சடங்குகளை அவருடைய மருமகன் கார்த்திக் செய்திருந்தார். இதற்காக அவர் வளசரவாக்கம் மின்மயானத்தில் மொட்டை அடித்துக் கொண்டு வந்த போது பிரியங்காவும் இந்திரஜாவும் அவரை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவர் மாமனாரின் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்ய அழைத்துச் செல்லப்பட்டார்.
ரோபோ சங்கர் - பிரியங்கா தம்பதியின் மகள் இந்திரஜா. இவர் பிகில் படத்தில் பாண்டியம்மாள் கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு விருமன் படத்திலும் நடித்திருந்தார். பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் வரவில்லை.

அவர் தனியாக யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவருடைய மாமா கார்த்திக் என்பவரை இந்திரஜா திருமணம் செய்து கொண்டார். தனது ஒரே மகளின் திருமணத்தை ரோபோ சங்கர் விமரிசையாக நடத்தி வைத்தார். இதற்காக அவர் பல விமர்சனங்களையும் பெற்றார்.
இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு உடல் மெலிந்து ரோபோ சங்கர் காணப்பட்டார். இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு தனக்கு மஞ்சள் காமாலை என்பதால் உடல் மெலிந்து விட்டதாகவும் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
அதன் பிறகு தனது உடற்பயிற்சி மற்றும் விடாமுயற்சியால் பழைய உடலை பெற்றார். அவர் காட்ஜில்லா எனும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ரோபோ சங்கர். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை பெருங்குடி ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருடைய உடல் மிகவும் மோசமடைந்து அவருடைய இதய துடிப்பு குறைந்து உள் உறுப்புகள் செயலிழந்து, இரைப்பை குடலில் ரத்த போக்கு ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் நேற்று காலமானார்.
இதையடுத்து அவருடைய உடலுக்கு இன்று ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
அது போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் நேரில் போய் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் ரோபோ சங்கரின் உடல் மாலை 4 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிருந்தாவன் காலனி மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் ரோபோ சங்கருக்கு ஒரே மகள் என்பதால் அவருடைய மாப்பிள்ளை கார்த்திக் மகன் ஸ்தானத்தில் இறுதி சடங்குகளை நடத்த ஆயத்தமானார். இதற்காக அவர் வேட்டி அணிந்து கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு மீசையை எடுத்துக் கொண்டு வந்தார்.
அவரை பார்த்து பிரியங்காவும் இந்திரஜாவும் கதறி அழுதனர். இதையடுத்து கார்த்திக்கை அங்கிருந்து அருகில் இருந்தவர்கள் அழைத்துச் சென்று இறுதி சடங்கு செய்ய வைத்தனர்.
ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவை கார்த்திக் அக்கா அக்கா என்றுதான் அழைப்பார். இன்னும் 15 ஆண்டுகளில் 60 ஆவது திருமணத்தை எடுத்து செய்ய வேண்டிய நிலையில் இன்று தனது மாமா, மாமனாரின் இறுதிச் சடங்கை செய்யும் நிலை ஏற்பட்டதை நினைத்து கார்த்திக்கும் கதறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications