சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அர்ஜுனமூர்த்திக்காக வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிக்கும் சிட்டி..ரஜினி ரசிகர்களுக்கு செம ஹேப்பியாமே

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற ஒன்றை தொடங்கிய அர்ஜுனமூர்த்தியின் வேட்பாளர்களுடன் ரோபோவும் சென்று வாக்கு சேகரிக்கவுள்ளதாக தகவல்கள வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் தொடங்கப்படாத கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டவர் அர்ஜுனமூர்த்தி. இவர் பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்து ரஜினிக்காக அங்கிருந்து விலகினார். இந்த நிலையில் ரஜினியின் உடல்நிலை ஒத்துழைக்காததால் அவர் கட்சி தொடங்கும் எண்ணத்தை கைவிட்டார்.

இதையடுத்து ரஜினி ஆரம்பித்து வைத்த மாற்றம் இப்ப இல்லேன்னா எப்பவும் இல்லை என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு ஒரு மாற்று அரசியலுக்காக கட்சியை தொடங்கியுள்ளார் அர்ஜுனமூர்த்தி.

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி

கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய கட்சியின் பெயர் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி. இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸோடு , இலவச பெட்ரோல் கார்டும் வழங்கப்படும். அது போல் எங்கள் கட்சி ஆட்சி அமைத்தால் 4 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என கட்சி அறிமுக விழாவில் அர்ஜுனமூர்த்தி தெரிவித்திருந்தார்.

வாழ்த்து

வாழ்த்து

இவரது கட்சிக்கு ரஜினியும் தனது வாழ்த்துகளை சொல்லியிருந்தார். இந்த நிலையில் வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள அர்ஜுனமூர்த்தியின் கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் அறிமுகம் செய்யும் வேட்பாளர்களுடன் ரோபோவும் சென்று வாக்கு சேகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களாம்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

ரஜினியை நேரில் பார்க்க முடியாட்டியும் சிட்டியையாவது நேரில் பார்ப்போம் என்கிறார்கள். ரஜினி ரசிகர்களில் சிலர் அர்ஜுனமூர்த்திக்கு ஆதரவாகவும் சிலர் தலைவர்ன்னா அது ரஜினிதான், வேறு யாரையும் ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்கள். இன்னும் சிலர் புதிய கட்சியை பதிவு செய்ய 7 நாட்கள் போதும் என தேர்தல் ஆணையம் விதிமுறையை வைரலாக்கி வருகிறார்கள்.

வாங்க களத்துக்கு

வாங்க களத்துக்கு

கூடவே தலைவா இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை. ஹூம் சொன்னா போதும், கட்சியை பதிவு செய்து வேலையை ஆரம்பித்துவிடலாம். கொஞ்சம் மனசு மாறுங்கள் என ஆடியோவாக இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் தலைவரின் கவனத்திற்கு செல்லும் வகையில் வைரலாக்குகிறார்கள். ரஜினி முடிவை அறிவிக்கும் வரை அர்ஜுனமூர்த்தி அனுப்பும் ரோபோவையாவது ரசிப்போம் என்கிறார்கள்.

English summary
Election Commission allots Robot symbol for Arjunamurthy's India Makkal Munnetra Katchi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X