Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மைதானத்தில் கீப்பருக்கு பின்னாடி.. "அதை" நோட் பண்ணீங்களா? ரோஹித் போட்ட பிளான்! கதையை முடித்த அஸ்வின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இன்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பிளானிங் பெரிய அளவில் கவனம் பெற்றது. அதில் இரண்டாவது இன்னிங்சில் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு ரோஹித் சர்மா அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எதிர்பார்த்தபடியே ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் ஸ்பின் பவுலர்களுக்கு எதிராக திணறி வருகிறார்கள்.

முக்கியமாக ஆஸ்திரேலியாவின் லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் ஸ்பின் பவுலர்களிடம் கடுமையாக திணறி வருகின்றனர். நாக்பூரில் நடந்து வரும் இந்த போட்டியில் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 250 ரன்களாவது எடுக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலர் கணித்து இருந்த நிலையில் 177 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா சுருண்டு உள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரில் லாபிசேன் மட்டுமே 49 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 37, கேரி, 36 ரன்கள் எடுத்தனர். மற்றபடி டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதாக ரன் எடுக்கவில்லை. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் தொடக்கத்திலேயே ஸ்பின் பவுலர்கள் மட்டுமின்றி பாஸ்ட் பவுலர்களும் ஆஸ்திரேலியாவிற்கு அழுத்தம் கொடுத்தனர். இரண்டாவது ஓவர் வீசிய சிராஜ் தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். இன்னொரு பக்கம் இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே வார்னர் ஷமி வீசிய பந்தில் போல்ட் ஆனார்.

அவுட் ஆனார்

அவுட் ஆனார்

முதல் இன்னிங்சில் சமி, சிராஜ் துல்லியமான லைனில் போட்டு ஆஸ்திரேலியாவிற்கு பிரஷர் கொடுத்தனர். 20 ஓவருக்கு பின்தான் அஸ்வின் பவுலிங் போடவே வந்தார். இது ஸ்பின் பிட்ச் என்றாலும் அதற்கு முன் பாஸ்ட் பவுலர்கள் ஓவரிலும் கூட ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை கணிக்க முடியாமல் கடுமையாக திணறவே செய்தனர். காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜடேஜா முதல் போட்டியிலேயே துல்லியமாக ஸ்பின் செய்தார். அவரின் பந்து இன்று பெரிதாக பவுன்ஸ் ஆகாததுதான் அவர் பிரஸர் போட முக்கியமான காரணமாக இருந்தது. அவரின் பவுலிங் மிகவும் தாழ்வாக வந்து ஸ்விங் ஆனது. லபுசேன், ஸ்மித், ரென்ஸா, ஹான்ஸ்காம்ப் என்று ஆஸ்திரேலியாவின் டாப் வீரர்களை ஜடேஜாதான் அடுத்தடுத்து சுருட்டினார்.

இரண்டாவது

இரண்டாவது

இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்து 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரோஹித் 120, அக்சர் பட்டேல் 84, ஜடேஜா 70 ரன்கள் என்று இந்திய வீரர்கள் சிறப்பாக ஆட இந்தியா முதல் இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா இறங்கியதுமே விக்கெட்டை இழந்தது. குவாஜா வெறும் 5 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவுட் ஆனார். இரண்டாவது ஓவரின் 5வது பந்திலேயே குவாஜா அஸ்வின் ஓவரில் அவுட் ஆனார்.

ரோஹித் பிளான்

ரோஹித் பிளான்

இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சின் முதல் ஓவரிலேயே கீப்பருக்கு பின் கூடுதலாக இரண்டு ஹெல்மெட் இருந்தது. இதன் அர்த்தம் ஷார்ட் லெக், சில்லி பாயிண்டில் பேட்ஸ்மேனுக்கு நெருக்கமாக இரண்டு பீல்டர்கள் நிற்க போகிறாரக்ள் என்பதுதான். அப்போதே ஸ்பின் பவுலர் 10 ஓவருக்கு முன்பாக போட போகிறார் என்று கணிக்கப்பட்டது. ஆனால் 2வது ஓவரிலேயே அஸ்வினை ரோஹித் சர்மா இறக்கினார். கடந்த இன்னிங்சில் அஸ்வினை 20 ஓவருக்கு பின் இறக்கிய ரோஹித் இந்த முறை இரண்டாவது ஓவரிலேயே இறக்கினார் இதனால் குவாஜாவும் அவுட் ஆனார். அஸ்வினை இப்படி தொடக்கத்திலேயே ரோஹித் இறக்கியது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+