தவான் வேண்டும்.. டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் அத்தியாவசியம்.. இந்திய அணி சொதப்ப இதுதான் காரணம்!
இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் இடதுகை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறுவதற்கான காரணம் பற்றி பார்க்கலாம்.
சென்னை: மிட்சல் ஸ்டார்ட், போல்ட் போன்ற இன் ஸ்விங்கர் பந்துகள் வீசும் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பி வருகின்றனர். எதிரணிகளின் இந்த வியூகத்தை தோனி எப்படி சமாளித்தார் என்பதும், இந்திய அணியில் தவானின் தேவை பற்றியும் பார்க்கலாம்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்க உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆனால் இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய்ட நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கிடமே விக்கெட்டை பறிகொடுத்தனர்.

டாப் ஆர்டர்கள் வீரர்கள் சொதப்பல்
இதன் மூலம் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு தொடர்ந்து இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் திணறுவது வெளிப்படையாகவே தெரிந்தது. உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வரும் டாப் ஆர்டர் வீரர்கள் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு திணறி வருவது இந்திய ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது. ஏற்கனவே 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இடதுகை பந்துவீச்சாளரான ட்ரென்ட் போல்ட் பந்தில் டாப் ஆர்டர் வீரர்கள் ஆட்டமிழந்ததே தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது.

தவானின் தேவை
தற்போது மீண்டும் இடதுகை பந்துவீச்சாளர்களிடம் மீண்டும் இந்திய அணி வீரர்கள் திணறி வருகின்றனர். இதனை சமாளிக்க இந்திய அணியில் போதுமான இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாததும் பின்னடைவாக உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்தபோது, இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்களான கம்பீர், தவானை வைத்து எளிதாக சமாளித்துக் கொண்டார். அதேபோல் மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங், ரெய்னா ஆகியோரின் தோனிக்கு சரியான பேட்டிங்கை கொடுத்தனர்.

தவானை கழற்றிவிட்ட நிர்வாகம்
ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சாளர்களை சமாளிப்பதற்காகவே பேட்டிங் வரிசையையும் தோனி மாற்றிக் கொண்டே இருப்பார். எதிரணியின் ஸ்பின்னர்களை கணக்கிட்டு அவர்களை வெளுத்து வாங்குவதற்கு மாற்று வீரர்களை முன்னதாக அனுப்புவார். தற்போது அதுதான் இந்திய அணிக்கு பிரச்சனையாக உள்ளது. இந்திய அணியில் இருக்கும் ஒரே இடதுகை பேட்ஸ்மேனாக ஜடேஜா மட்டுமே உள்ளார். டாப் ஆர்டரில் சுப்மன் கில்லை கொண்டு வருவதற்காக ஷிகர் தவானை இந்திய நிர்வாகம் கழற்றிவிட்டுள்ளது.

சர்வதேச இடதுகை பந்துவீச்சாளர்கள்
தற்போது இந்திய அணி ஷிகர் தவானின் தேவையை நன்றாக உணர்ந்துள்ளது. ஏனென்றால் இடதுகை பந்துவீச்சாளர்களின் இன்-ஸ்விங்கை வலதுகை பேட்ஸ்மேன்களால் சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு விராட் கோலி அளவிற்கு திறன் தேவையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியில் ஷாகின் அப்ரிடி, நியூசிலாந்து அணியில் போல்ட், தென் ஆப்பிரிக்கா அணியில் யான்சன், இங்கிலாந்து அணியில் டாப்லி என்று பலம் வாய்ந்த இன் ஸ்விங் பந்துகளை வீசும் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

மாற்றம் செய்யப்படுமா?
இதனால் இந்திய அணியின் டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேனின் தேவை அத்தியாவசியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜடேஜாவின் பேட்டிங் வரிசையும் 5வது இடத்திற்கு மாற்ற வேண்டிய தேவை உள்ளது. இடது கை மற்றும் வலது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது பந்துவீச்சாளர்கள் லைன் மற்றும் லெந்தை மாற்ற வேண்டிய தேவை ஏற்படும் என்பதால், இந்திய அணியின் பேட்டிங் வலிமைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications