Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டை முழுக்க 50 தையல்! சிறுமியின் தந்தை கதறல்! நஷ்ட ஈடு தராத அரசு? சைலண்ட் ஆன போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாயின் உரிமையாளரை வழக்கிலிருந்து காப்பாற்ற காவல்துறை முயற்சி செய்வதாக நாய்க்கடித்த சிறுமியின் தந்தை புகார் கூறியுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி அருகே பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தனது வளர்ப்பு நாய்களுடன் பூங்காவுக்குக் கடந்த சில நாள்கள் முன்னதாக காலை நடைப்பயிற்சி வந்துள்ளார். அப்போது அங்குப் பூங்கா காவலாளியின் 5 வயது மகள் சுதிக்ஷா விளையாடிக் கொண்டிருந்தார்.

Rottweiler bite girl s father is in agony

சற்றும் எதிர்பாராத நேரத்தில் சிறுமியை இரண்டு Rottweiler வளர்ப்பு நாய்களும் கடித்துக் குதறின. அப்போது அங்கிருந்த நாய்களின் உரிமையாளர் புகழேந்தி தடுக்கவில்லை எனப் புகார் தெரிக்கப்பட்டிருந்தது.

சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு தாய் சோனியா ஓடிச் சென்று தனது மகளைக் காப்பாற்றினார். அப்போது அவரையும் அந்த நாய்கள் கடித்தன.

இதையடுத்து தலையில் பலத்த காயங்களுடன் இருந்த சுதிக்ஷாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Rottweiler bite girl s father is in agony

பின்னர் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, சிறுமியின் சிகிச்சைக்கான செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.

அதனையடுத்து சிறுமி, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியை டிஸ் சார்ஜ் செய்யும் படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், முறையாக இந்தச் சம்பவத்திற்கு நஷ்ட ஈடு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.

Rottweiler bite girl s father is in agony

அதேபோல், நாயின் உரிமையாளர் முறையாக விசாரிக்கப்படவில்லை எனச் சிறுமியின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகவே மருத்துவமனையை விட்டு வெளியேற அவர்கள் மறுத்து வருகின்றனர்.

இந்த விவகாரம் பற்றி சிறுமியின் தந்தை ரகு, “குழந்தை சகஜமாக உள்ளது. பேசவும் செய்கிறாள். அதில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆகவே, வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால், தலையில் 40 முதல் 50வரை தையல் போட்டுள்ளார்கள். பின் பக்கம் மண்டை முழுவதும் தையல் போட்டுள்ளார்கள். அது குணமாக நாள்களாகும்.

மருத்துவர்கள் சீரான நிலைக்குக் குழந்தை திரும்பி விட்டாள். எனவே வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்கிறார்கள். இங்கே இருந்தால் தொற்று உண்டாகும் என்கிறார்கள். நான் வீட்டுக்கு அழைத்துச் சென்றால் தொற்று வராதா? அப்படி ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது.

Rottweiler bite girl s father is in agony

இப்போது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டால், திடீரென்று சீழ் பிடித்தாலோ அல்லது ரத்தம் கசிந்தாலோ நாங்கள் மீண்டும் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற முடியாது. அந்தளவுக்கு எங்களிடம் வசதிகள் இல்லை. நான் ஒரு சாதாரண கூலித் தொழிலாளிதான். நாங்கள் வெளியேறிவிட்டால், அடுத்தது நாயின் உரிமையாளரைத் தொடர்பு கொள்ள முடியாது.

எனவே குழந்தை குணம் அடையும் வரை நாங்கள் மருத்துவமனையை விட்டு வெளியேற மாட்டோம். அந்தக் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். அது பெண் குழந்தை. அவளது எதிர்காலத்திற்கு ஒரு உத்தரவாதம் தேவை.

இந்தப் பிரச்சினையில் தலையிட்டு முதல்வர் ஸ்டாலின் ஏதாவது உதவ வேண்டும். நான் இதைத்தான் செய்ய வேண்டும் எனக் கேட்கவில்லை. அவரே மகளின் எதிர்காலத்தை உணர்ந்து உதவினால் நல்லது.

Rottweiler bite girl s father is in agony

நாயின் உரிமையாளர் ஏதேனும் உதவுவதாகச் சொல்லி இருக்கிறார். ஆனால் அது உறுதியாகச் சொல்லப்படவில்லை. பேச்சுவார்த்தையில்தான் உள்ளது. அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை.

இப்படி உள்ளபோது, என் குழந்தைக்கு என்ன பாதுகாப்பு உள்ளது சொல்லுங்கள்" என்கிறார் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை.

இவருக்கு விழுப்புரம் பக்கம்தான் சொந்த ஊர். மாநகராட்சி பூங்காவில் கூலித் தொழிலாளியாக உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+