சென்னை எண்ணூரில் சாலையில் புகுந்த கடல் நீர்! தூக்கிவீசப்பட்ட பைக்குகள்! ஆட்டம் காட்டிய ஒர்னாப் புயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒர்னாப் புயல் ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயலின் முன்பகுதி கரையை கடந்து வரும் நிலையில் இதன் தாக்கம் சென்னையிலும் எதிரொலித்தது. வடசென்னை, திருவான்மியூர், எண்ணூரில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடல் அலைகள் பாறைகளை தாண்டி சாலைக்கும் வந்தது. இதில் சாலையில் சென்ற பைக், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

ஒர்னாப் புயல் எதிரொலியாக, சென்னை ஈசிஆர் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால், போலீசார் வாகனங்களில் சென்றபடி ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். கடற்கரைகள், சாலைகளில் நிற்பவர்களை கையெடுத்து கும்புட்டு கேட்டுக்குறோம், கிளம்புங்கள் என விரட்டி வருகிறார்கள்..

Rough seas due to Cyclone Arnab Seawater enters roads in Chennai affecting motorists

கரையை கடக்க ஆரம்பித்தது

வங்கக் கடலில் உருவான ஒர்னாப் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை தான் கரையை கடைக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதைவிட முன்கூட்டியே நேற்று இரவு 10 மணியளவிலேயே புயல் கரையை கடக்க ஆரம்பித்தது. அதி தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்னும் நீண்ட நேரம் கடலில் மையம் கொண்டிருந்தால் மிக அதி தீவிர புயலாக மாறியிருக்கும்.

இதனால் 220 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 180 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது புயலின் வால் பகுதி இன்று காலையில் முழுமையாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்த பிறகு 180 கிமீ வேகத்தில் காற்றானது வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவின் கடற்கரையோர பகுதிகளில் கடல் சீறத்துடன் காணப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஆந்திராவில் தான் அப்படி என்றால், அதி தீவிர இந்த புயல் காரணமாக சென்னையிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

தூக்கி வீசப்பட்ட பைக்குகள்

சென்னை ஈசிஆர் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றப்பட்டனர். முன்னதாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் செல்ஃபி மற்றும் வீடியோக்கள் எடுக்க சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். ஆனால் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் போலீசார் அவர்களை வெளியேற்றினர்.

மேலும், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
"கையெடுத்து கும்புட்டு கேட்டுக்குறோம்.. எல்லாரும் வீட்டுக்கு போங்க.. செல்ஃபி, ரீல்ஸ் எடுக்குற இடம் இது இல்ல.. இயற்கையோட விளையாடாதீங்க.. கிளம்புங்கள்" என்று கூறி வந்தனர். இதே போன்று எண்ணூர் பகுதியில் கடல் அலை ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்தது. பாறைகளை தாண்டி சாலைகளிலும் ஆக்ரோஷ அலைகள் வந்தன.

இதனால் சாலையில் சென்று கொண்டிருந்த பைக்குகள், ஆட்டோக்கள் அடித்து செல்லப்பட்டன. பைக்கில் வந்தவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். இதையடுத்து சக வாகன ஓட்டிகள் பைக்குகளை மீட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு வந்து வாகன போக்குவரத்தை அந்த சாலையில் தடை செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+