சென்னையில் பஸ்சில் அடிக்கடி டிராவல் பண்ணுறீங்களா?எம்டிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் 7 வழித்தட பேருந்துகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ்களின் தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, அதில் 7 வழித்தட எண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாதவரம் டூ தாம்பரம், கவியரசு கண்ணதாசன் நகர் டூ தாம்பரம் என 7 வழித்தடங்களில் பேருந்து எண்கள் மாற்றப்பட்டுள்ளன.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் மாநகர பேருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சென்னையில் ரயில், மெட்ரோ ரயில் வசதி இல்லாத பகுதிகளுக்கு பயணிகள், மாநகர பேருந்தையே நம்பியிருக்கிறர்கள். சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை மாநகர பஸ்கள்
ஆயிரக்கணக்கான பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் வழித்தடத்தை கண்டறிவதற்காக வழித்தட எண்களுடன் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தட எண்களை வைத்தே பயணிகள், பேருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லுமா? என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.
உதாரணத்திற்கு சென்னை பிராட்வேயில் இருந்து கோயம்பேட்டிற்கு 15 பி என்ற வழித்தட எண்ணுடன் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த ரூட் எண்ணை பார்த்தாலே போதும், இந்த பேருந்து எந்த வழித்தடம் வழியாக செல்லும் என்பது ரெகுலராக செல்லும் பயணிகளுக்கு தெரியும். இப்படி பேருந்துகளில் வழித்தட எண் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் 7 வழித்தட பேருந்துகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன.
வழித்தட எண்கள் மாற்றம்
மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ்களின் தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, அதில் 7 வழித்தட எண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை மநரக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாநகரப் போக்குவரத்துக் கழகம் பயணிகள் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பஸ்களை இயக்கி வருகிறது. ஒவ்வொரு பேருந்து வழித்தடத்திற்கும் ஒவ்வொரு தட எண் வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, 7 வழித்தட எண்களை மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் இன்று முதல் இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழித்தடம் மாற்றப்பட்ட பேருந்துகளின் விவரம்:-
புதிய வழித்தட எண்கள்
* மாதவரம் டூ தாம்பரம் (பழைய எண் - 121F) - மாற்றப்பட்ட எண் - 170A
* கவியரசு கண்ணதாசன் நகர் டூ தாம்பரம் - (121 H) - புதிய எண் - 170T
* அய்யப்பன் தாங்கல் - பிராட்வே (11GET) - புதிய எண் - 11M
* பிராட் வே டூ கிளாம்பக்கம் (18Ax) - புதிய எண் - 18A
* திருவாண்மியூர் டூ கிளாம்பாக்கம் (91K) - புதிய எண் 91
* பூந்தமல்லி டூ கூடுவாஞ்சேரி (66x) புதிய எண் 66 px
* கவியரசு கண்ணதாசன் நகர் டூ கிளாம்பக்கம் (121 H ET) - புதிய எண் - 121 TX இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications