சென்னையில் இரவில் ரவுடி விரட்டிச் சென்று வெட்டிக் கொலை.. 8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!
சென்னை: சென்னை திருவொற்றியூரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரவுடி சத்யாவை 8 பேர் கொண்ட கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்துள்ளது. சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு 29-வது பிளாக்கை சேர்ந்தவர் சத்யா (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எண்ணூர் காவல் நிலையத்தில் பி பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாக சத்யா உள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூர் பகுதியில் விஜய் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர் நேற்று இரவு திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 8 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் சத்யாவை பின்தொடர்ந்து விரட்டி உள்ளது. அவர்களிடமிருந்து தப்பிக்க சத்யா திருச்சிணாங்குப்பம் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் நுழைந்தார். விடாமல் துரத்திய அந்த மர்ம கும்பல், சத்யாவை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதில் தலையில் பலத்த வெட்டு காயம் அடைந்த சத்யா அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்தக் கொலை குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சத்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications