சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு நிமிஷம் இருங்க.. காக்க வைத்து விட்டு.. கத்தியுடன் பாய்ந்த மணிகண்டன்.. ரவுடி என்கவுன்டரில் பரபர!

ரவுடி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    கத்தியுடன் பாய்ந்த மணிகண்டன்.. ரவுடி என்கவுண்டரில் பரபர!-வீடியோ

    சென்னை: "டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்.. ஒரு நிமிஷம் இருங்க" என்று சொல்லி போலீசாரை கத்தியால் குத்த முயன்றுள்ளார் தாதா மணிகண்டன். இப்படித்தான் அவரது கடைசி நொடி இருந்திருக்கிறது.

    புதுச்சேரி ஆரோவில்லை ஒட்டிய குயிலாப்பாளையம் தான் மணிகண்டனின் கிராமம். கட்டப்பஞ்சாயத்து, முதல் பாலியல் தொழில் வரை மணிகண்டனுக்கு அத்துப்படி. யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அசால்ட்டாக கொலை செய்துவிடுவார்.

    44 வயதான இந்த தாதா மீது 8 கொலை வழக்குகள், கொலை முயற்சி என்று 26 கேஸ்கள் உள்ளன. அதாவது தமிழ்நாடு, புதுச்சேரி என்று 2 மாநிலங்களிலுமே வஞ்சம் வைக்காமல் குற்ற செயல்களில் இறங்கி உள்ளார் மணிகண்டன்.

    Exclusive: ''அரசியலுக்கு புதிது என்பதால் மெதுவாக தான் செயல்படுகிறேன்''.. ம.நீ.ம. உமாதேவிExclusive: ''அரசியலுக்கு புதிது என்பதால் மெதுவாக தான் செயல்படுகிறேன்''.. ம.நீ.ம. உமாதேவி

    30 பேர் கொலை

    30 பேர் கொலை

    பூபாலன் என்ற ரவுடி மணிகண்டனுக்கு தலைவலியாக வந்தார். இவர்களுக்குள் ஏற்பட்ட தொழில் ரீதியான போட்டியில் இதுவரை 30 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் இவர்கள் சண்டை தீரவில்லை. அப்போது விழுப்புரம் எஸ்பியாக இருந்த நல்லசிவம், பெரிய்யா, அமல்ராஜ், இவர்கள் எல்லோருமே 2 தரப்பையும் கூப்பிட்டு வார்னிங் கொடுத்தும், கிரிமினல் நடவடிக்கைகள் அடங்கவே இல்லை.

    ஆத்திரம்

    ஆத்திரம்

    இந்நிலையில்தான், அதாவது 2010-ல் ஆண்டு மணிகண்டனின் தம்பி ஆறுமுகத்தை பூபாலன் ஆட்கள் கொலை செய்தது. இதுதான் மணிகண்டனுக்கு இன்னும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வெறித்தனமான மணிகண்டனின் நடவடிக்கைகளை கண்ட போலீசார், வேறு வழியில்லாமல் என்கவுன்டர் லிஸ்ட்டில் சேர்த்தனர். ஆனால், "நான் திருந்தி வாழ போறேன்" என்று 2015-ல் எஸ்பி அமல்ராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தார் மணிகண்டன்.

    திருந்தி வாழ போறேன்

    திருந்தி வாழ போறேன்

    அப்போது செய்தியாளர்களிடமும் மணிகண்டன் பேசும்போது,"நான் ஒரு தப்பும் செய்யல. என் பேரை சொல்லிதான் நிறைய பேர் கஞ்சா விற்கிறார்கள், பணம் வசூலிக்கிறாங்க. பூபாலன் அங்கே விபச்சார தொழில் நடத்துறான். ஆனால் என் பேரை சொல்லி அங்கே தொழில் நடத்துறாங்க. அதனால என் மேல கேஸ் போட்டுட்டாங்க. அதனாலதான் இப்போ திருந்தி வாழ போறேன்னு எஸ்பி ஐயா கிட்டே மனு தந்திருக்கேன்" என்றார்.

    பிரமுகர்

    பிரமுகர்

    இவ்வளவும் பேசின மணிகண்டன் அடங்கி இருந்தது என்னவோ ஒருசில நாட்கள்தான். திரும்பவும் தன் வேலையை காட்டினார். போன வருடம் காங்கிரஸ் பிரமுகர் கொலை, ரியல் எஸ்டேட் பிரமுகர் கொலை என முக்கிய பிரமுகர்களின் கொலைகளில் மணிகண்டனுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்ததையடுத்து போலீசார் அலர்ட் ஆகி மணிகண்டனை பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் மணிகண்டன் எஸ்கேப் ஆகியிருந்தார்.

    சரண்டர்

    சரண்டர்

    இதுநாள் வரை அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் மணிகண்டன் சென்னையில் 4 மாடி குவார்ட்டஸில் குடும்பத்துடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படியே நேற்று மாலை ஸ்கெட்ச் போட்டு, மணிகண்டன் குவார்ட்டஸை சுற்றி வளைத்தனர். இதை அறிந்த மணிகண்டன், "நான் சரண்டர் ஆகிறேன். வீட்டுக்கு வாங்க, நான் டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்" என்று சொல்லி வீட்டுக்குள் போனார். அதன்படியே 2 போலீசாரும் உள்ளே சென்றுள்ளனர்.

    என்கவுன்டர்

    என்கவுன்டர்

    ஆனால் ஃப்ரிட்ஜுக்குப் பின்னாடி மறைத்து வைத்திருந்த கத்தியை திடீரென உருவிய மணிகண்டன் போலீசாரை குத்த முயன்றார். இதில், எஸ்ஐ பிரபுவின் தலையில் பலமாக வெட்டு விழுந்தது. இதற்குபிறகுதான் தற்காப்புக்காக போலீசார் சுட்டுள்ளனர். அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தான் மணிகண்டன்.

    போலீசார் குவிப்பு

    போலீசார் குவிப்பு

    இந்நிலையில், மணிகண்டனின் சொந்த ஊரான குயிலாப்பாளையம் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கடைகள் அடைக்கப்பட்டு ஆரோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள 40 க்கும் மேற்பட்ட அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு ஒருவித அமைதி சூழல் நிலவி வருகிறது. இதனிடையே மணிகண்டன், 2 வருடங்களாக திருவண்ணாமலையில் வீடு கட்டி வாழ்ந்து வந்துள்ளார் என்கிறார்கள். அதனால், அவரது உடல் திருவண்ணாமலை கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தாதா

    English summary
    Background story of the Rowdy Manikandan and 3 rounds gunfire background on him near Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X