சூர்யாவை ஞாபகம் இருக்கா.. பதவியேற்ற அடுத்த செகண்டே கைதானாரே விஜயலட்சுமி.. இப்ப ஒரு புது தகவல்
ரவுடியின் மனைவி விஜயலட்சுமி பதவியேற்று கொண்டார்
சென்னை: வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற, பிரபல ரவுடி சூர்யாவின் மனைவி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.. இந்நிலையில், ஊராட்சி மன்ற துணை தலைவராக பிரபல ரவுடியின் மனைவி பதவியேற்று கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா.. 34 வயதாகிறது.. இவர் ஒரு ரவுடி.. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் சூர்யா மீது கொலை, கொலை முயற்சி உட்பட 50 க்கும் மேற்பட்ட கேஸ்கள் உள்ளன.
இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி.. 32 வயதாகிறது.. 2 குழந்தைகள் இவர்களுக்கு உள்ளனர்.. இதில் ரவுடி சூர்யா, வழக்கு ஒன்று தொடர்பாக கைதாகி சிறையில் உள்ளார்.

போட்டி
இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்தில் அடங்கிய நெடுங்குன்றம் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜயலட்சுமி சுயேட்சையாக போட்டியிட்டார்.. இவரை எதிர்த்து ஜெயலட்சுமி என்பவர் மட்டும் போட்டியிட்டார். ஆனால் அவரும் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து விஜயலட்சுமி போட்டியின்றி 9வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அக்டோபர் 20ம் தேதி வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்று கொண்டனர்.. இந்த பதவி ஏற்பு விழாவில் விஜயலட்சுமியும் பங்கேற்று பதவியேற்று கொண்டார்...

விஜயலட்சுமி
பதவியேற்று முடித்ததும், மேடையிலிருந்து விஜயலட்சுமி கீழே இறங்கியதுமே, அங்கு வந்த ஓட்டேரி போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.. ஆனால், விஜயலட்சுமி போலீசாருடன் செல்ல மறுப்பு தெரிவிக்கவும், பெண் போலீசார் விஜயலட்சுமியை சுற்றி வளைத்து கைது செய்து, ஜீப்பில் ஏற்றி வண்டலூர் ஓட்டேரி ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.. இதனால் விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்து, போலீசாரை சூழ்ந்து கொண்டு போராட்டம் செய்தனர். அதுமட்டுமல்ல, ஜனநாயக முறைப்படி விஜயலட்சுமி தேர்வாகி உள்ளதால், அவரை கைது செய்வதை ஏற்க முடியாது என்றும் வாதம் செய்தனர்.

விஜயலட்சுமி
ஆனால், விஜயலட்சுமி மீதும் கஞ்சா கேஸ் இருக்கிறதாம்.. கடந்த ஆகஸ்ட் மாதம் கஞ்சாவை கடத்தி அந்த பகுதியில் விற்பனை செய்து வந்ததாவும், அது தொடர்பாக 3 வழக்குகள் அவர்மீது பதிவாகி இருப்பதால், கைது செய்வதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.. ஆனால், இது எல்லாவற்றிற்கும் காரணம் திமுகதான் என்றும், காழ்ப்புணர்ச்சியோடு இப்படி பொய் புகார் சொல்லி கைது செய்துள்ளது என்றும் விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். எனினும் விஜயலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டார்.

துணைத்தலைவர்
இதனிடையே, அக்டோபர் 22ம் தேதி நெடுங்குன்றம் ஊராட்சி துணைதலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் நடந்து முடிந்தது.. அப்போது, விஜயலட்சுமி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் அவருக்கு முன்மொழிந்த பன்னீர், வழிமொழிந்த பாலாஜி ஆகியோர் விஜயலட்சுமியின் துணை தலைவருக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதில் 12 வார்டு உறுப்பினர்கள் விஜயலட்சுமிக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து, அவர் ஜெயிலில் இருந்தபடியே ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னிலை
இந்நிலையில், கடந்த 20ம் தேதி காலை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் விஜயலட்சுமி.. பின்னர், நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா சீனிவாசன் முன்னிலையில் நேற்று ஊராட்சி துணை தலைவராகவும் பொறுப்பேற்று கொண்டார்... இது அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது என்றாலும், திமுகதான் இவ்வளவுக்கும் காரணம் என்பதை ஆதங்கத்துடன் சொல்லி வருகிறார்களாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications