சூர்யாவை ஞாபகம் இருக்கா.. பதவியேற்ற அடுத்த செகண்டே ரவுடியின் மனைவி அதிரடி கைது.. என்ன காரணம்?
சென்னை: வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற நிலையில், பிரபல ரவுடி சூர்யாவின் மனைவி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.. விஜயலட்சுமி பதவியேற்கும் போது அங்கு அந்த போலீசார், அவரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா.. 34 வயதாகிறது.. இவர் ஒரு ரவுடி.. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் சூர்யா மீது கொலை, கொலை முயற்சி உட்பட 50 க்கும் மேற்பட்ட கேஸ்கள் உள்ளன.
இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி.. 32 வயதாகிறது.. 2 குழந்தைகள் உள்ளனர்.. இதில் சூர்யா, வழக்கு ஒன்று தொடர்பாக கைதாகி சிறையில் உள்ளார்.

ஊராட்சி
இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்தில் அடங்கிய நெடுங்குன்றம் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜயலட்சுமி சுயேட்சையாக போட்டியிட்டார்.. இறுதியில் விஜயலட்சுமி வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற நிலையில், நேற்றைய தினம் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்று கொண்டனர்.. இந்த பதவி ஏற்பு விழாவில் விஜயலட்சுமியும் கலந்துகொண்டு பதவியேற்றார்...

ஓட்டேரி
பிறகு மேடையிலிருந்து விஜயலட்சுமி கீழே இறங்கியதுமே, அங்கு வந்த ஓட்டேரி போலீசார் அவரை கைது செய்தனர்.. ஆனால், விஜயலட்சுமி போலீசாருடன் செல்ல மறுத்ததால், பெண் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து அழைத்து சென்று வேனில் ஏற்றி வண்டலூர் ஓட்டேரி காவல்நிலையம் கொண்டு சென்றனா். இதை பார்த்த விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்..

ஆவேசம்
போலீசாரை சூழ்ந்து கொண்டு, எதற்காக வார்டு உறுப்பினரை கைது செய்து அழைத்து செல்கிறீர்கள் என்று கேட்டு போராட்டம் செய்தனர். ஜனநாயக முறைப்படி விஜயலட்சுமி தேர்வாகி உள்ளதால், அவரை கைது செய்வதை ஏற்க முடியாது என்று வாக்குவாதமும் செய்துள்ளனர். விஜயலட்சுமி மீதும் கஞ்சா கேஸ் உள்ளதாம்.. கடந்த ஆகஸ்ட் மாதம் கஞ்சாவை கடத்தி அந்த பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளார்..

அதிரடி கைது
எனவே அது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரை கைது செய்ததாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.. ஆனால், இது எல்லாவற்றிற்கும் காரணம் திமுகதான் என்றும், காழ்ப்புணர்ச்சியோடு தன்மீது பொய் புகார் கூறி கைது செய்துள்ளது என்றும் விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள். நாளை நடக்க உள்ள மறைமுக தேர்தலில், துணை தலைவராக போட்டியிட விஜயலட்சுமி முடிவு செய்திருந்த நிலையில், கைதாகி உள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications