ஒரு கோடி நிலம்.. ஒரே நாளில் காலி.. சென்னையில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு எப்படி செய்கிறார்கள்?
சென்னை: ஆவடி அடுத்த பாலவேடு, மேலப்பேடு கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் என்பவருடைய தந்தைக்கு சொந்தமாக ஆவடி அருகே 13 சென்ட் நிலம் இருந்துள்ளது. அந்த நிலத்தை ஜெகதீசனின் சித்தி மற்றும் அவரது மகள்கள் போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்திருந்தார்களாம். சுமார் ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை ஏமாந்த ஜெகதீசன், போலீசார் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் 2 பேரை கைது செய்தனர். போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை எப்படி பத்திப்பதிவு செய்கிறார்கள் என்தை பார்ப்போம்.
சென்னையில் ஏழைகள், நடுத்தர வர்க்கம் நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு வீடு மற்றும் அடுக்குமாடிகளின் விலை அதிகரித்துவிட்டது. இடம் வாங்கி போட்டு வீடு கட்டலாம் என்கிற கனவை எல்லாம் சென்னை மக்கள் 20 வருடங்களுக்கு முன்பே தொலைத்துவிட்டார்கள். தற்போதைய நிலையில் சென்னையின் புறநகரில் நடுத்தர வர்க்கத்தினர் இடம் வாங்கி போட்டு வருகிறார்கள். என்றாவது ஒரு நாள் தனது குழந்தையின் உயர் கல்விக்கு, திருமணத்திற்கு, மருத்துவ செலவிற்கு, பின்னாளில் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அது கைகொடுக்கும் என்று நினைக்கிறார்கள். அப்படியே கொடுத்தும் வருகிறது..

ஆனால் அப்படி வாங்கிப் போடும் இடத்தை, சிலர் ஆள்மாறாட்டம் செய்து நில ஆவணங்களை மோசடி செய்து தங்கள் பெயரில் மாற்றுகிறார்கள். அப்படியே சில அப்பாவிகளின் தலையில் சூட்டோடு சூடாக விற்கவும் செய்கிறார்கள். வாங்கியவரும் ஏமாறுகிறார்கள். இடத்தின் உண்மையான ஓனரும் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார். அப்படித்தான் சென்னையில் ஒரு கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. எப்படி என்பதை பார்ப்போம்.
ஆவடி அடுத்த பாலவேடு, மேலப்பேடு கிராமத்தை சேர்ந்த 70 வயதாகும் ஜெகதீசன் என்பவர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறுகையில், எனது தந்தை குப்புசாமிக்கு மேலப்பேடு கிராமத்தில் உள்ள 13 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து எனது சித்தி ரங்கம்மாள், அவரது மகள்கள் புஷ்பா, பார்வதி, கனகவள்ளி ஆகியோர் பெயரில் பத்திரப்பதிவு செய்து இருப்பது தெரியவந்தது. இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதுபற்றி ஆவடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் புஷ்பாவின் மகன்களான பாலவேடு, மேலப்பேடு திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த டில்லிபாபு (45) மற்றும் சீனிவாசன் (42) ஆகிய இருவரும் போலியான ஆவணங்கள் தயாரித்து சாட்சி கையெழுத்து போட்டு இந்த நில மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து டில்லிபாபு, சீனிவாசன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.
பொதுவாக போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி எப்படி நடக்கிறது
பலருக்கும் போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி எப்படி நடக்கிறது என்கிற சந்தேகம் இருக்கும். பொதுவாக ஒரு வயதானவருக்கு சொத்து இருக்கிறது என்றால், அவரது உறவினர்கள் தான் பெரும்பாலும் வாரிசு என்று கூறி ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்கிறார்கள்.
அதேநேரம் சில போலியாக ஆதார் கார்டு தயாரித்தும், தான் தான் மாரிமுத்து, மொக்கசாமி, முருகேசன் என்று ஆவணத்தின் உரிமையாளர் பெயரில், அதே முகவரியில் ஒரு ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கை உருவாக்கி மோசடி செய்வது நடக்கிறது. பழைய நிலங்களை இப்படி ஏமாற்றுவது அவ்வப்போது நடக்கிறது. இதில் போலி ஆவணங்கள் மூலம் ஏமாறுவதை தடுக்க பத்திர ஆவணங்களை யாருக்கும் தரக்கூடாது. பத்திர ஆவணங்களின் நகல்கள் மோசடியாளர்கள் வசம் இருந்தால், அவர்கள் மோசடியான ஆவணத்தை உருவாக்கி விற்கவும் தயங்குவது இல்லை..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications