Lottery: ஒரே நாளில் மாறிய தலைவிதி.. கோடீஸ்வரி ஆன மேஸ்திரி மனைவி! லாட்டரியால் கொட்டிய கோடிகள்
டெல்லி: வெறும் 35 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கிய கொத்தனாரின் மனைவிக்கு ரூ.1 கோடி பரிசு அடித்துள்ளது. திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்கென அடித்ததாம் யோகம் என்பதற்கு இணங்க, எதேச்சையாக மருத்துவமனைக்கு செல்லும் போது லாட்டரி சீட்டு வாங்கிய அந்த பெண் தற்போது கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்.
அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த எங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை பரிசாக அடித்து இருப்பதை நம்ப முடியவில்லை என்றும், மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பணத்தை வைத்து முதலில் ஒரு வீடு கட்டப்போவதாகவும், பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கப் போவதாகவும் அந்த பெண் கூறினார்.

லாட்டரி பரிசு
லாட்டரியில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரியாது. திண்ணையில் கிடந்தவருக்கு திடுக்கென அடித்ததாம் யோகம் என்று ஒரு பேச்சு வழக்கு உண்டு. அது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ லாட்டரியில் பணம் அடித்து திடீர் பணக்காரர் ஆகுபவர்களுக்கு பொருந்தும் எனலாம்.
லாட்டரி என்பது ஒரு சூதாட்டம் போன்றதுதான். எத்தனையோ பேர் பரிசு இல்லாமல் வெறும் கையுடன் போவார்கள் என்றாலும் யாரோ ஒருவரை பல கோடிகளுக்கு அதிபதியாக்கிவிடுகிறது என்பதால் ஆசை யாரை விட்டது என்பது போல, லாட்டரி மீதான மோகம் பலருக்கும் போவது இல்லை.
இதனால் தாமும் என்றாவது ஒரு நாள் பணக்காரர் ஆகிவிட மாட்டோமா என்ற ஆசையில் லாட்டரி வாங்கி வருகிறார்கள். இதில் ஒரு சிலருக்கு வாங்கிய முதல் லாட்டரி சீட்டிலேயே பரிசு அடித்துவிடும். ஆனால் ஒரு சிலர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரிசே அடிக்கவில்லை என சொல்கிறார்கள்.
35 ரூபாய் டிக்கெட்டுக்கு ஒரு கோடி பரிசு
தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் கொத்தனார் வேலை செய்து வருபவரின் மனைவிக்கு லாட்டரியில் பரிசு அடித்துள்ளது.
மருத்துவமனைக்கு சென்ற போது எதேச்சையாக செல்லும் வழியில் லாட்டரி கடையில் ரூ.35-க்கு லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார். அந்த லாட்டரி சீட்டுக்கு தான் தற்போது பரிசு அடித்து ஒரே நாளில் கோடீஸ்வரி ஆகியிருக்கிறார் அந்த பெண். மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் 35 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரிக்கு ரூ.1 கோடி பரிசு அடித்துள்ள செய்தி தீயாய் பரவி வருகிறது.
நமக்கெல்லாம் எங்கே அடிக்க போகிறது
பெலாரி கிராமத்தை சேர்ந்த டோலி பேகம் என்ற பெண்ணுக்குதான் இந்த யோகம் அடித்துள்ளது. உடல் நிலை சரியில்லாததால், குஸ்கரவில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற டோலி பேகம், வரும் வழியில் 35 ரூபாய் கொடுத்து லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். நமக்கெல்லாம் எங்கே அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என மனதிற்குள் நினைத்தாலும், சரி வாங்கித்தான் பார்ப்போமே என்று டிக்கெட்டை வாங்கியுள்ளார் பேகம்.
ரொம்ப பணக் கஷ்டம் இருந்தது
ஆனால், டிக்கெட் குலுக்கல் முடிந்து முடிவுகள் வெளியான பிறகு அதை பார்த்த பேகத்திற்குக் கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை. முதல் பரிசான ரூ.1 கோடி, அவர் வாங்கிய டிக்கெட்டிற்கு விழுந்துள்ளது. தலைவிதி ஒரேநாளில் மாறிப் போனதால் மகிழ்ச்சியில் திளைத்த பேகம் கூறியதாவது:-
"எனது கணவர் மோஃபிசுல் மேஸ்திரியாக உள்ளார். எங்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மிகக் குறைந்த வருமானத்தில் கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி வந்தோம் வீட்டு செலவை சமாளிக்க நானும் தையல் வேலையில் ஈடுபட்டு வருகிறேன். தினமும் எதாவது ஒரு ரீதியில் பணக்கஷ்டம் வந்து கடும் பாடுபட்டு வந்தோம்.
இப்போது லாட்டரியில் இவ்வளவு பெரிய தொகை அடித்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த பணத்தை வைத்து முதலில் ஒரு வீடு கட்டப்போகிறோம். மகன், மகள் இருவரையும் நன்றாக படிக்க வைக்கப் போகிறோம்" என்று அந்த பெண் கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications