"ஹிந்தி கால்.." தயாநிதி மாறன் வங்கி கணக்கிலிருந்து சட்டென மாயமான பணம்.. என்ன ஒரு ஃப்ராடுத்தனம்
சென்னை: திமுக எம்பி தயாநிதி மாறன் மனைவியின வங்கிக் கணக்கிலிருந்து ரூ 1 லட்சம் பணத்தை சுருட்டிய வடமாநில கும்பலை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சென்னை ஆர்.ஏ.புரம் போர்ட் கிளப் பகுதியில் வசித்து வரும் தயாநிதி மாறன் எம்பி நேற்றைய தினம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். திமுக எம்பியாக உள்ளேன். நானும் என் மனைவி பிரியாவும் சேர்ந்து ஜாயின்ட் அக்கவுன்ட்டை கோபாலபுரத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் சேமிக்கு கணக்காக வைத்துள்ளோம்.

கடந்த 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மலேசியாவிலிருக்கும் என் மனைவிக்கு தெரியாத செல்போன் எண்களில் இருந்து 3 தடவை போன் வந்துள்ளது. அதில் ஹிந்தி மொழியில் பேசியவர்கள் ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து பேசுவதாகவும் ரூ 99,999 பண பரிவர்த்தனை உங்களால் செய்யப்பட்டதா என கேட்டுள்ளனர்.
எனது மனைவி எந்தவித ஓடிபி நம்பரையும் கொடுக்காத நிலையில் எங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 99,999 ஒரே தடவையாக எடுக்கப்பட்டுவிட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. எனவே சம்பந்தப்பட்ட மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
OUR PRIVATE DATA IS NOT SAFE IN #DigitalIndia!
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) October 10, 2023
On Sunday, ₹99,999 was stolen from my @AxisBank personal savings account through a net banking transfer via @IDFCFIRSTBank-@BillDesk, bypassing all normal safety protocols.
An OTP, the standard protocol for such transactions, was…
மேலும் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பர் தன்னுடையது தான் என்றும் தனது மனைவியின் செல்போன் எண் இல்லை என்றும் புகாரில் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவுக்கு புகாரை அனுப்பி வைத்தார்.
அதன் பேரில் தயாநிதிமாறன் மனைவிக்கு வந்த செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் ஹிந்தி மொழியில் பேசியதாக அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்த மோசடியாளர்கள் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. அப்படியிருக்கும் போது ஓடிபி சொல்லாமல் எப்படி பணம் மோசடி செய்யப்பட்டிருக்கும் என்ற அதிர்ச்சி எழுந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications