மகளிர் உரிமை தொகை மாதிரியே.. இன்னும் 7 நாளில் வங்கி கணக்கில் அரசு தரும் ரூ.1000! யாருக்கு கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழ் புதல்வன்" திட்டம் இன்னும் 7 நாட்களில் மாதம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம் போலவே வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர்களுக்கு 'தமிழ் புதல்வன்' திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Tamil Nadu Government Notification m k stalin dmk

மாற்றப்பட்ட திட்டம்: கடந்த வருடம் தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்' மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றுவதாக அறிவித்தார்.

அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூவாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

யாருக்கு வழங்கப்படுகிறது?: அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'புதுமைப்பெண் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் கடந்த வருடம் நடந்து 1 வருடமாக பணம் கொடுக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு பணம்: இந்த நிலையில்தான் புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம்.

போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்சினை. போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கும்; இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்: அரசு பள்ளியில் படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாணவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். மாணவர்கள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை.

நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'தமிழ் புதல்வன் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் விரைவில் நடத்தப்பட உள்ளது.

விரிவாக்கம்: அதேபோல் காலை உணவு திட்டமும் விரிவாக்கப்பட்ட உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 31,008 பள்ளிகளில் பயிலும் 25 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தியா முழுக்க கவனம் பெற்ற இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளுக்கும் மதிய உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

தொண்டு நிறுவனங்களின் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறன் உடைய குழந்தைகளுக்கு வரும் ஜூன் 1ம் தேதி முதல் மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் உள்ள சத்துணவு மையத்தில் இருந்து சிறப்பு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவும், அவர்களுக்கான தட்டு, டம்ளர் உள்ளிட்டவற்றை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+