நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையிலான திட்டம் தமிழகத்தில் விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில், சென்னை அடையாறு, கூவம் ஆறுகளையும், பக்கிங்காம் கால்வாய் மற்றும் நீர் நிலைகளை தூய்மைப்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

Rs 2,371 crore allocated to prevent sewage mixing in water Resources

மேலும், வரும் 2023ம் ஆண்டுக்குள் 2,371 கோடி ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தப்படும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி மாநகராட்சிகளில் நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

கோவை வெள்ளலூரில் 178 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டில் புதிய பேருந்து நிலையம் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும் . தருமபுரி, நாமக்கல், ராமநாதபுரம் சேலம் உள்ளிட்ட7 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் ஆறு கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும் என்றும், 110-ன் விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஆவின் மையம் அமைக்க 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும், நீர்வள ஆதாரங்களை அதிகரிப்பதற்கும் நிரந்தர மற்றும் நிலையான தீர்வுகளை கண்டறிவதற்கும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியம் 2690 மில்லியன் லிட்டர் கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பின்மூலம் சுத்திகரித்து மறுபயன்பாட்டிற்காக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்நிலைகளில் விடுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+