Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளிகள் வளர்த்தது ஏன்? நடிகர் ரோபோ சங்கரின் விளக்கத்தை ஏற்க மறுத்து ரூ 2.50 லட்சம் அபராதம் விதிப்பு

நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ 2.5 லட்சம் அபராதம் விதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் கிளிகளை வளர்த்ததாக நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ 2.5 லட்சம் வனத்துறை அபராதம் விதித்துள்ளது.

சென்னை வளசரவாக்கம், லட்சுமி நகர், 11 ஆவது தெருவில் வசித்து வருபவர் காமெடி நடிகர் ரோபோ சங்கர். இவர் தனியார் தொலைகாட்சி காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் விஜயகாந்த் உள்ளிட்டோர் போல் மிமிக்ரி செய்து புகழடைந்தார்.

ரோபோ சங்கரின் நடனமும் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. அவர் சற்று பருமனாக இருந்தாலும் மிகவும் கிரேஸாக நடனம் ஆடுவார். அவரை போல் அவரது மனைவி பிரியங்கா, மகளும் பருமனாக இருந்தாலும் அழகாக நடனம் ஆடுவார்கள்.

விஸ்வாசம், மாரி உள்ளிட்ட படங்களில் ரோபோ சங்கர் நடித்துள்ளார். இவர் அண்மையில் தனது வீட்டில் வளர்க்கும் கிளிகள் குறித்து யூடியூப் வீடியோவில் கூறியிருந்தார். அந்த கிளிகள் அலெக்சாண்ட்ரியன் கிளிகள் ஆகும். இதை வனத்துறையின் அனுமதி இல்லாமல் வளர்க்கக் கூடாது என தெரிகிறது. இந்த நிலையில் ரோபோ சங்கர் வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டு கிளிகள் குறித்து யாரோ வனத்துறைக்கு புகார் அளித்துவிட்டதாக தெரிகிறது.

வனத்துறை அதிகாரிகள்

வனத்துறை அதிகாரிகள்

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் 15 ஆம் தேதி ரோபோ சங்கர் வீட்டிற்கு சென்றனர். அங்கு ரோபோ சங்கர் குறித்து விசாரித்த போது அவர் குடும்பத்துடன் இலங்கைக்கு சென்றிருப்பதாக காவலர்கள் கூறினர். இதையடுத்து அவரது வீட்டில் வளர்த்து வந்த 2 கிளிகளையும் கூண்டோடு வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வகை கிளிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது என்பதால் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

2 கிளிகளும் பறிமுதல்

2 கிளிகளும் பறிமுதல்

இந்த 2 கிளிகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த கிளிகளை ரோபோ சங்கர் எங்கே வாங்கினார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த கிளிகள் ரோபோ சங்கரின் நண்பர் ஒருவர் கொடுத்ததாக தெரிகிறது. அவர் வெளிநாடுக்கு மாற்றலாகி சென்றதால் அந்த கிளிகளை எடுத்து செல்ல முடியாது என்பதால் ரோபோவிடம் கேட்ட போது அவர் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தாராம்.

3 ஆண்டுகள்

3 ஆண்டுகள்

அதன் பேரில் அந்த கிளியை 3 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்களாம். இந்த கிளிகள் ரோபோவின் மகள் பிகில் படத்தில் நடித்த பிறகு வந்ததால் அதற்கு பிகில், ஏஞ்சல் என்ற பெயர்களை வைத்தனராம். ரோபோவை அந்த கிளிகள் ரோபோ என்றே அழைக்குமாம். கிளிகள் வளர்ப்பை வனத்துறைக்கு சொல்லக் கூடாது என நினைத்திருந்தால் எப்படி அது குறித்த வீடியோவை நான் வெளியிட்டிருப்பேன் என ரோபோ தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

காட்டில் விடப்படும் கிளிகள்

காட்டில் விடப்படும் கிளிகள்

தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் இரு கிளிகளுக்கும் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யப்படும். அதன் பிறகு அவற்றை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பழகியதும் அவற்றை காடுகளில் விட்டுவிட வனத்துறை முடிவு செய்துள்ளதாம். இந்த நிலையில் ரோபோ சங்கரிடம் வனத்துறையினர் விளக்கம் கேட்டனர். அவர் அளித்த விளக்கம் வனத்துறையினருக்கு ஏற்புடையதாக இல்லை. அதனால் அவருக்கு ரூ 2.50 லட்சம் அபராதம் விதித்தனர்.

 வெளிநாட்டு கிளிகள்

வெளிநாட்டு கிளிகள்

மேலும் இது போன்ற வெளிநாட்டு கிளிகளை அடைத்து வைத்து வளர்க்க கூடாது என்றும் அதன் குணமே சுதந்திரமாக சுற்றி திரிவதுதான் என்றும் கூறி விழிப்புணர்வு வீடியோவை வெளியிடுமாறும் ரோபோ சங்கருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அவரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டார். இந்த கிளிகளின் குணாதிசயமே அவை கூட்டம் கூட்டமாக வசிப்பதுதான். இயற்கையான வாழ்விடத்தை விட்டு இந்த கிளிகள் வேட்டையாடப்படுகின்றன.

வாழ்நாள்

வாழ்நாள்

இதனால் அதன் வாழ்நாள் கணிசமாக குறைகிறது. கூட்டம் கூட்டமாக வாழும் குணம் கொண்ட இந்த கிளிகளை தனித்து வாழும் நிலைக்கு தள்ளுகிறோம். அவை மிகவும் கொடூரமான நிலைகளில் வைக்கப்படுகின்றன. எனவேதான் இவற்றை வீட்டில் வளர்ப்பது சட்டபடி குற்றமாகும். சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பலுக்கு அதிக அளவில் பணம் சம்பாதித்து கொடுக்கிறது. இவை எளிதாக நோயை பரப்பும் என்பதால் இவற்றை மற்ற பறவைகளை போல வீட்டில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+