தமிழ்நாடு முழுக்க.. 47 லட்சம் பேருக்கு.. வங்கி கணக்கில் வழங்கப்படும் ரூ.2000.. ஏன் தெரியுமா?
சென்னை; பிரதமர் நரேந்திர மோடி பிஎம்-கிசான் திட்டத்தின் 18வது தவணையை செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 47 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் நிதி உதவி பெற உள்ளனர். இந்த மாதத்திற்கான நிதி இந்த வாரம் வழங்கப்பட உள்ளது. யாருக்கெல்லாம் இந்த பணம் வழங்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 3.24 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் பயன் அடைவார்கள்.
2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட PM-KISAN திட்டம், நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்குகிறது. நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடி) முறையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி மாற்றப்படுகிறது.

ஏற்கனவே ஜூலை மாதம் நடந்த நிகழ்ச்சியின் போது, கிரிஷி சாகி ஒருங்கிணைப்பு திட்டத்தின் (KSCP) கீழ் 30,000 க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்களில் (SHGs) பெண்களுக்கு 'கிருஷி சாகிஸ்' என்ற சான்றிதழ்களையும் பிரதமர் மோடி வழங்கினார்.
பணம் வழங்கிய மத்திய அரசு: மொத்தமாக சுமார் 9.25 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.20,000 கோடி கொடுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தமாக ரூ.3.24 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
பயன் உள்ள திட்டம்: இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 9.26 கோடி பயனாளிகளுக்கு ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பணம் வழங்கப்பட உள்ளது.. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் செய்யப்பட்ட நிதி மூலம், PM-KISAN திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்தப் பலன்கள் ரூ. 3.04 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. 2019 இல் தொடங்கப்பட்டதில் இருந்து 11 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயி குடும்பங்களை பணம் சென்றடைந்துள்ளது.
யாருக்கெல்லாம் இந்த பணம் வழங்கப்படும் என்பதை எளிதாக சில கிளிக் மூலம் சோதனை செய்ய முடியும்.
எப்படி சோதனை செய்வது?: இந்த திட்டத்தில் பணம் பெற நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். இதற்கான திட்ட விண்ணப்பத்தை நிரப்பி, அதில் இணைய வேண்டும். அதேபோல் உங்களிடம் வங்கி கணக்கு இருக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கை கேஎப்சி உடன் சரிபார்த்து இருக்க வேண்டும். அதோடு இல்லாமல் உங்கள் போன் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். சரி இந்த திட்டம் மூலம் உங்களுக்கு இந்த பணம் கிடைத்திருக்கிறதா என்று பார்க்க பின்வரும் வகையில் சோதனை செய்ய வேண்டும்.
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ PM Kisan இணையதள பக்கத்தில் லாக் இன் செய்யவும்.
ஸ்டெப் 2: லாக் இன் செய்தவுடன் Beneficiary Status Page என்ற பக்கம் காட்டும். அந்த பக்கத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 3: அங்கே உள்ள "Beneficiary Status" என்பதைக் கிளிக் செய்தால் அடுத்த பேஜ் திறக்கும்.
ஸ்டெப் 4: நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இருந்தால் உங்கள் லாக் இன் கணக்கை எடுத்து வைத்துக்கொள்ளவும். அதை பயன்படுத்தி உங்கள் ஆதார் எண் அல்லது அக்கவுண்ட் எண் மூலம் உள்ளே செல்ல முடியும்.
ஸ்டெப் 5: அந்த பக்கத்தில் "Get Data" என்பதைக் தேர்வு செய்து உங்கள் விவரங்களை பார்க்கலாம். நீங்கள் திட்டத்தில் இருக்கிறீர்களா என்பதை சோதனை செய்ய முடியும்.
ஸ்டெப் 6: இதிலேயே உங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதையும் பார்த்து சோதனை செய்து கொள்ள முடியும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications