27 மாவட்டங்களில்.. 2 நாட்களில் ரூ. 291.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை.. 2 நாளும் மதுரைதான் பர்ஸ்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் 2 நாட்களில் ரூ. 291.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. 2 நாளிலும் மதுரையில் தான் அதிக மதுபானங்கள் விற்றுள்ளன.
Recommended Video
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த தளர்வுகளில் ஒன்றாக 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் கடைகள் திறப்பு
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பாஜக போராட்டம் நடத்தியது. பாமக போராட்டம் நடத்தவுள்ளது. இப்படி ஒரு பக்கம் எதிர்ப்பு இருக்க, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.

கடும் உற்சாகம்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் பல கடைகளில் எந்த நேரமும் 'குடி'மகன்கள் வருகை இருந்து வருகிறது. டாஸ்மாக் கடை திறப்பை ஒரு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் ஒரு சில 'குடி'மகன்கள். 'குடி'மகன்கள் மட்டும் இல்லாமல் ஒன்றிரண்டு 'குடி'மகள்களும் மது வாங்குவதற்காக வரிசையில் நிற்பதை பார்க்க முடிகிறது.

மதுரை முதலிடம்
இப்படி 'குடி'மகன்கள் கடும் வரவேற்பு கொடுக்க டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட முதல் நாளே வசூல் சாதனை படைத்தது. முதல் நாளான அதாவது கடந்த 14-ம் தேதி அன்று 164.87 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றுள்ளன. ரூ.49.96 கோடி விற்பனையாகி மதுரை மண்டலம் முதலிடம் பிடித்தது. சென்னை மண்டலம் 14 ரூ.42.96 கோடியுடன் இரண்டாம் இடம் பிடித்தது.

மொத்தம் ரூ.291.96 கோடி
இரண்டாவது நாளான நேற்று 27 மாவட்டங்களில் ரூ.127.09 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இரண்டு நாளும் சேர்த்து மொத்தம் ரூ.291.96 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இரண்டாவது நாளும் மதுரைதான் முதலிடம். ரூ.37.28 கோடி விற்பனையாகி மதுரை முதலிடமும், சென்னை (ரூ.33.41 கோடி )2-வது இடமும் பிடித்துள்ளது. திருச்சி மண்டலம் 27.64 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.28.76 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
"பீர் டூ ஒயின் வரை".. தேர்தலால் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க கட்டுப்பாடு! எத்தனை பாட்டில் வாங்கலாம்? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications