ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.300.. சென்னையில் வருகிறது ஏர் டாக்ஸி.. இந்தியாவையே மாற்றப்போகும் திட்டம்
சென்னை: பெங்களூர், சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, ஹைதராபாத், கோவை, கொச்சி, அஹமதாபாத் உள்பட இந்தியாவின் பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிக கடுமையாக இருக்கிறது. சாலைகளில் செல்ல வேண்டிய வாகனங்களின் அளவை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமான வாகனங்கள் செல்கின்றன. இந்த நெரிசலான வாழ்க்கைக்கு விடை கொடுக்க வருகிறது ஏர் டாக்ஸி சேவை.. 2028-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இந்த சேவை தொடங்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
போக்குவரத்து நெரிசல் என்பது இந்தியாவின் பெருநகரங்களில் கடுமையாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண மெட்ரோ ரயில், பாலம், மின்சார ரயில்கள் என பல்வேறு வசதிகள் இருந்தாலும் நெரிசல் என்பது குறைந்தபாடில்லை.. மணிக்கணக்கில் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் ஏற்படும் நெரிசல் சொல்லி தெரியவேண்டியதில்லை.. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பெருநகரங்களில் ஏர் டாக்ஸி வரப்போகிறது. மணிக்கணக்கில் போக வேண்டிய இடத்தை ஒருசில நிமிடங்களில் அடைந்து விடலாம். வானத்தையே நெடுஞ்சாலை போல் ஏர் டாக்ஸிகள் மாற்ற போகின்றன. இனி வானில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இலலை..
சேவைகள் எப்படி இருக்கும்
'ஏர் டாக்ஸி'யை பொறுத்தவரை பயணிகள், அவசர மருத்துவம், சரக்குகளை கையாளுவது என 3 வகைகளில் சேவைகள் இருக்க போகிறது, இந்தியாவில் தற்போது மிக மோசமான நெரிசல் ஏற்பட்டு வரும் பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக தொடங்க திட்டமிடப்பட்டு , பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்தியாவில் மூன்று நகரங்களில் தொடக்கம்
3 நிறுவனங்கள், 'ஏர் டாக்ஸி' தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றன. இதில் பெங்களூருவை சேர்ந்த சார்லா ஏவியேசன் என்ற நிறுவனம் 'ஏர் டாக்ஸி' சோதனைகளை தொடங்கிஉள்ளது, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், 2026-ம் ஆண்டில் டெல்லி, மும்பை மற்றும் புனே நகரங்களில் 'ஏர் டாக்ஸி' சோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.
அதானி குழுமம் ஆர்வம்
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான இன்டெர்குளோப் என்டர்பிரைசஸ், அமெரிக்காவின் ஆர்செர் ஏவியேசனுடன் இணைந்து விரைவில் இந்தியாவில் வணிக ரீதியான 'ஏர் டாக்ஸி' சேவையை முடிவு செய்திருக்கிறது. அதானி குழுமம் இதற்கான கட்டமைப்பு மற்றும் முனையங்களை அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 'ஏர் டாக்ஸி' முனையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
'ஏர் டாக்ஸி'யை பொறுத்தவரை ஹெலிகாப்டர் போல செங்குத்தாக மேல் எழும்பவும், தரையிறங்கவும் முடியும். இவை முற்றிலும் மின்சாரத்தால் இயங்குவதால், சத்தம் மிக குறைவாக இருக்கும். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணமாக வசூலிக்கப்படலாம் என்கிறார்கள். சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இந்த போக்குவரத்து சேவைக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளத.
தமிழ்நாட்டுக்கு எப்போது?
தமிழ்நாட்டில் சென்னையில் இந்த 'ஏர் டாக்ஸி' வரும் என தெரிகிறது. சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த 'இபிளான்' கம்பெனி நிறுவனம் இதற்கான வேலைகளை செய்து வருகிறது. சென்னையில் அடுத்த ஆண்டுக்குள் சோதனை ஓட்டங்கள் முடிந்து, சரக்கு போக்குவரத்து சேவை முதலில் தொடங்கும்.
சென்னையில் எப்போது
2028-ல் வணிக ரீதியான ஏர் டாக்ஸி சேவை சென்னையில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் . அதன்பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. ஏர் டாக்ஸி வந்தால் சென்னை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், மும்பை போன்ற பெருநகரங்களில் நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கலாம்
வெர்டிபோர்ட் வேண்டும்
அதேநேரம் ஏர் டாக்ஸியை பொறுத்தவரை அதற்கு என்று விமான நிலையம் போல், வெர்டி போர்ட் அமைக்க வேண்டும். விமானங்கள் தரையிறங்கி நிறுத்தி வைக்கும் இடங்களுக்கு ஏர்போர்ட் என பெயர் இருப்பது போல, இந்த ஏர் டாக்ஸிகளுக்கான இடம் 'வெர்டிபோர்ட்' ஆகும்.
'வெர்டிபோர்ட்' என்பது 'ஏர்போர்ட்' போல் பெரிய இடவசதி தேவையில்லை. ஹெலிகாப்டர் இறங்கும்அளவிற்கு வசதிகள் இருந்தாலே போதும்
வெர்டிபோர்ட் எப்படி அமைக்கப்படும்
மொட்டை மாடிகளில் ஹெலிபேட் போல எளிதாக இறங்கும். ஏர் டாக்ஸிகளுக்கு மிக விரைவாக சார்ஜ் செய்யும் வசதி அங்கேயே அமைக்க வேண்டும். அஙகு பயணிகள் ஸ்கேனிங் மற்றும் சிறிய அளவிலான காத்திருப்பு அறை மட்டுமே அமைக்க வேண்டும். அவை இருந்தாலே ஏர் டாக்ஸி சேவையை தொடங்கிவிடலாம்.
வெர்டிபோர்ட் தளம் சென்னையில் எங்கு அமைக்கப்படும்
சென்னையை பொறுத்தவரை சென்னை விமானநிலையம், கிளாம்பாக்கம் , கோயம்பேடு பஸ் நிலையம், ஆலந்தூர் மெட்ரோ நிலையம், சோழிங்கநல்லூர் சந்திப்பு, சிறுசேரி சிப்காட், தரமணி, நந்தனம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், முக்கிய மருத்துவமனைகளில் 'வெர்டிபோர்ட்' தளம் அமைக்கப்படும் என தெரிகிறது.
-
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications