நடிகர் விஜய்க்கு காரால் வந்த புதிய பிரச்சனை.. ரூ.500 அபராதம் விதித்த போலீஸ் - என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் போக்குவரத்து விதிகளை மீறி தனது காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாக கூறி அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து முன்னணி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

 வாரிசு

வாரிசு

இதன் படப்பிடிப்பு ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று உள்ளது. இப்படத்துக்கு தமன் இசையமைத்து இருக்கிறார். இதன் முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

 தெலுங்கில் சிக்கல்

தெலுங்கில் சிக்கல்

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியால் இயக்கி, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜால் தயாரித்த இப்படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வரசுடு என்ற பெயரில் வெளியாக உள்ளது. ஆனால் அங்கு மகா சங்கராந்தியாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேரடி தெலுங்கு படங்கள் மட்டுமே வெளியிட வேண்டும் என அம்மாநில தயாரிப்பாளர்கள் சங்கம் திரையரங்குகளுக்கு அறிவுறுத்தியது.

மக்கள் இயக்க கூட்டம்

மக்கள் இயக்க கூட்டம்

இதற்கு சீமான், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தமிழ் சினிமா இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.

 ரசிகர்களுடன் ஆலோசனை

ரசிகர்களுடன் ஆலோசனை

5 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் தனது ரசிகர்களை சந்தித்த அவர், நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறத். இப்போது அவர் ரசிகர்களுடன் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டார்.

இன்னோவா கார்

இன்னோவா கார்

இந்த சந்திப்பில் கலந்துகொள்ள பனையூர் அலுவலகத்திற்கு நடிகர் விஜய் வருகை தந்தவுடன் அவரது கார் அருகே ரசிகர்கள் ஓடிச்சென்று கைகொடுக்கவும், செல்பி எடுக்கவும் முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகின. அதில் விஜய் வந்திருந்த டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

போலீசிடம் புகார்

போலீசிடம் புகார்

அதுதான் தற்போது விஜய்க்கு சிக்கலாகி இருக்கிறது. கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது என்று சமூக வலைதளங்களில் பலர் குற்றம்சாட்டினர். அந்த வீடியோவை சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு டேக் செய்து இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிலர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி இருந்தனர்.

ரூ.500 அபராதம்

ரூ.500 அபராதம்

இந்த நிலையில் காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது போக்குவரத்து விதியை மீறும் செயல் என்பதால், வழக்குப்பதிவு செய்த சென்னை போக்குவரத்து காவல்துறையினர், நடிகர் விஜய் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக விளக்கமளித்து இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+