என்ன பாஸ் பைக் ரேஸ் செய்ய போறீங்களா? ரூ 5000 அபராதத்துடன் போங்க.. வந்தாச்சு புது ரூல்ஸ்!
சென்னை: தமிழகத்தில் பொதுச் சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபட்டால் ரூ 5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படும் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன சட்டம் தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோரால் விபத்துகள் நடைபெறுகின்றன. இதனால் ஓட்டுநர் அல்லாமல் அப்பாவிகளும் உயிரிழக்கவும் உறுப்புகளை இழக்கவும் நேரிடுகிறது.
இந்த நிலையிில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதற்கேற்ப வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 44 வகையான அபராதங்கள் விதிக்கப்படுகிறது.

சாலைகள்
ஆயினும் முக்கியமான பொது சாலைகளில் வாகன பந்தயங்களில் ஈடுபட்டால் ரூ 5000 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பிற இடங்களில் ரேஸில் என்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கான ரேஸர் பைக்குகளை வாங்கும் இளைஞர்கள் இரவு நேரங்களில் பைக் ரேஸ்களில் அதுவும் பொது சாலைகளில் ஈடுபடுகிறார்கள்.

வாகனங்கள்
அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துகளில் சிக்குவதால் சாலையோரத்தில் படுத்திருப்போர், இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அது போல் ஈசிஆர் சாலைகளிலும் இது போன்ற ரேஸ்கள் பகல் நேரத்திலும் நடைபெறுவதாக அப்பகுதியினர் சொல்கிறார்கள்.

அனுமதியில்லாத இடங்கள்
இது போன்ற அனுமதியில்லாத இடங்களில் நடத்தப்படும் பைக் ரேஸ்களால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. பைக் ரேஸ்களுக்கென தனியாக பாதை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் இது போன்ற ரேஸ்களில் ஈடுபட போலீஸார் அறிவுறுத்தியும் இவர்கள் கேட்காமல் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் நெருப்பைக் கக்கும் அளவுக்கு வாகனத்தை இயக்குகிறார்கள்.

பந்தயம்
இதற்கு முன்னர் பந்தயம் கட்டி வாகனத்தை இயக்கினால் ரூ 1000 அபராதமாக வசூல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்தத் தொகை ரூ 5000 ஆக உயர்ந்துள்ளது. பைக் ரேஸ் மட்டும் அல்ல, செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு, வாகன உதிரி பாகங்களின் இடங்களை மாற்றினாலும் அதற்கும் அபராதம் வசூலிக்கப்படும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications