குடிமகன்களுக்கு ஷாக்! டாஸ்மாக் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்வு! ரூ.80 டூ ரூ.320 வரை அதிகரிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குவாட்டர், ஒயின், பீர் உள்ளிட்டவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு விற்பனைகள் நடந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கிடையே தான் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்தால் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் குடிமகன்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையே தான் இன்று அதிரடியாக டாஸ்மாக் நிர்வாகம் மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் விலை குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு என்பது அனைத்து குவாட்டர், ஒயின், பீர் என அனைத்து வகையான மதுபானங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின்படி 330 மில்லி வெட்மென் பில்சென்னர் பீர் ரூ.280ல் இருந்து ரூ.290 ஆக உயர்ந்துள்ளது. 500 மில்லி ஜெர்மணியா பில்ஸ்நர் பீர் (கேன்) ரூ.250ல் இருந்து ரூ.27 ஆகவும், 300 மில்லி ஹாவெர்லி விட் பீர் ரூ.290ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர 750 மில்லி ஸ்காட்ஸ் கிரே பிளென்டெட் ஸ்காட்ச் விஸ்கி ரூ.2000ல் இருந்து ரூ.2240 ஆகவும், 750 மில்லி பிபிடர் ஜின் ரூ.2220 முதல் ரூ.2460 ஆகவும், 750 மில்லி ஜேமிசன் ஐரிஸ் விஸ்கி ரூ.3030 முதல் ரூ.3270 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்சமாக 1 லிட்டர் பிளாக்ஆப் ஸ்கயா வொட்கா பாட்டிலுக்கு ரூ.320 உயர்த்தப்பட்டு ரூ.1980 முதல் ரூ.2, 300 ஆகவும், ஹைலேன்ட் கோல் பிளன்டெட்ன ஸ்காட் விஸ்கி ரூ.320 உயர்த்தி ரூ.2,580 முதல் ரூ.2900 வரையும் விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு மொத்தம் 18 வகையான வெளிநாடு மதுபானங்களின் விலைமை டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக உயர்த்தி உள்ளது. இதனால் குடிமகன்கள் ஷாக்காகி உள்ளனர்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications