Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாஷிங் மெஷின் வாங்க ரூ.8000! அடமானமில்லா 5 லட்சம் கடன்! வைரலாகும் திமுக கனிமொழியின் முதலீடு தந்திரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கை மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கான மின்னணு சாதனங்கள் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்புகள், வெறும் கவர்ச்சித் திட்டங்கள் என்பதைத் தாண்டி, பெண்களின் நேரத்தையும் உழைப்பையும் மதிப்பிடும் ஒரு சமூகப் புரட்சியாக முன்வைக்கப்படுகிறது... இது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஆகியோர் முன்வைத்துள்ள கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் அக்கட்சியினரால் பகிரப்பட்டு வருகின்றன.

திமுகவின் தேர்தல் அறிக்கை "ஜெராக்ஸ்" எடுக்கப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.. இந்த விமர்சனங்களை முற்றிலுமாக நிராகரித்துள்ளார் திமுக மூத்த தலைவர் கனிமொழி

DMK Kanimozhi

ஒரு திட்டத்தின் பின்னால் இருக்கும் தத்துவார்த்த புரிதலே முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காஸ் அடுப்பு வழங்கியபோது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கனிமொழி - திமுக தேர்தல் அறிக்கை

செலவைக் குறைக்க ஒற்றை பர்னர் அடுப்பு வழங்கலாம் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கியபோது, "பெண்கள் சமையலறையிலேயே முடங்கிக் கிடக்கக் கூடாது, அவர்கள் விரைவில் வேலைகளை முடித்துவிட்டு தங்களுக்குப் பிடித்த மற்ற காரியங்களில் ஈடுபட வேண்டும்" என்பதற்காகவே இரண்டு பர்னர் அடுப்புகளை வழங்க கருணாநிதி உத்தரவிட்டார் என்பதை நினைவு கூர்ந்தார்.

இதே தர்க்கம்தான் இப்போது கூப்பன் திட்டத்திற்கும் பொருந்தும் என்பது கனிமொழியின் வாதமாகும்.. வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மிக்ஸி போன்ற சாதனங்கள் வெறும் ஆடம்பரப் பொருட்கள் அல்ல; அவை ஒரு பெண்ணின் நேரத்தைச் சேமிக்கும் கருவிகள். அந்த மிச்சமாகும் நேரத்தை அவர்கள் வேறு ஆக்கப்பூர்வமான பணிகளில் முதலீடு செய்ய முடியும்.

அதனால் இந்த சாதனங்களை ஒரு "முதலீடாக" பார்க்க வேண்டும் என்ற புதிய பார்வையை அவர் முன்வைத்துள்ளார். பெண்களை வீட்டு வேலைகளிலிருந்து விடுவித்து, அவர்களை சமூகத்தின் மற்ற தளங்களுக்குக் கொண்டு வருவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்பது இதில் புலனாகிறது.

நம்பகத்தன்மை

இந்த விவாதத்தின் மற்றொரு முக்கிய அங்கமாக அமைந்தது திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கத்தின் பதில். தேர்தல் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்துப் பேசிய அவர், கடந்த கால அனுபவங்களைச் சுட்டிக்காட்டினார். திமுக 1000 ரூபாய் அறிவித்தபோது, அதிமுக 1500 ரூபாய் தருவதாகக் கூறியது. ஆனால், மக்கள் தொகையைவிட சொல்பவரின் நாணயத்தையே பார்த்தார்கள். அந்த நம்பிக்கையே திமுகவை வெற்றி பெறச் செய்தது என்றார்.

காசி முத்து மாணிக்கம் முன்வைத்த மிக முக்கியமான தகவல் என்னவென்றால், திமுகவின் இந்தத் திட்டங்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருவதுதான்.

காசி முத்து மாணிக்கம்

தமிழகத்தின் காலை உணவுத் திட்டத்தை கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பின்பற்றுவதைப் போல, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். குறிப்பாக, மகளிருக்கு எந்தவித அடமானமுமின்றி 5 லட்சம் ரூபாய் கடன் உதவி மற்றும் வாஷிங் மெஷின், ஏசி வாங்க 8,000 ரூபாய் வழங்கும் திட்டம் போன்றவை எதிர்காலத்தில் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..

மேற்கண்ட இந்த இரு தலைவர்களின் பேச்சுகளைதான் திமுகவினர் வைரலாக்கி வருகிறார்கள்.. திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் வாக்குறுதிகளின் தொகுப்பு மட்டுமல்ல, அது பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் மற்றும் அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும் ஒரு தொலைநோக்குப் பார்வையாக சித்தரிக்கப்படுகிறது என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

ஆக, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு புள்ளிவிவரங்களோடு பதில் அளிப்பதை காட்டிலும், திட்டங்களின் சமூகத் தாக்கத்தை விளக்குவதன் மூலம் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க திமுக திட்டமிட்டுள்ளது என்றே தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+