மது கிண்ணத்தில் விழுந்த வண்டு போல்..மயக்கத்தில் மக்கள்! இப்போ தான் சொரணை வந்துருக்கு! - ஆர்எஸ் பாரதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, மது கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மக்கள் இன்னும் மயக்கத்தில் தான் இருக்கிறார்கள் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் ஆணவ பேச்சை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பழனி ஆண்டவர் கோயில் தெரு பெரம்பூரில் நடைபெற்றது. இதில், எம்பி அயலக அணி தலைவருமான கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

RS Bharathi dmk Vijay

திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய
ஆர்எஸ் பாரதி," தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. மது கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மக்கள் இன்னும் மயக்கத்தில் தான் இருக்கிறார்கள்.

ஆர்எஸ் பாரதி

இப்பொழுதுதான் மின் கட்டணத்தை பார்த்து சற்று சொரணை வந்துள்ளது. திமுகவுக்கு ஓட்டு போடவில்லை என்றால் ஊரைவிட்டு போகும் அளவிற்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்று உணர்ந்திருக்கிறார்கள். முன்பு குடிதண்ணீர் வரவில்லை என்றால் உடனடியாக குறைகளை சரி செய்தோம். படகோட்டி படத்தைப் பார்த்து எம்ஜிஆருக்கு ஓட்டு போட்டார்கள். அப்போது சில நடவடிக்கையினால் எட்டு மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்.

உதயநிதி ஸ்டாலின்

பெரம்பூர் தொகுதியில் அனைத்து வசதிகொண்ட மிகப் பெரிய திருமண மண்டபம் திமுக ஆட்சியல் கட்டிக் கொடுத்திருக்கிறார். ஏசி பேருந்து நிலையம் ஏன் கட்டிக் கொடுத்தீர்கள்? தற்பொழுது கஞ்சா போதை ஆசாமிகள் தான் பயன்படுத்துகிறார்கள். பார்த்து பார்த்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வந்தோம். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் மூன்று நாள் வாய்தா வாங்கி சென்றார் முதலமைச்சர்

இந்திரா காந்தி

அப்போது எமர்ஜென்சி விட்டு எங்களை ஆதரியுங்கள் என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டது.
ஜெயகாஷ் நாராயணன் தான் இந்திரா காந்தி சிறுமியாக இருக்கும் போது எடுத்து வளர்த்தவர். ஆனால் அவரையே மிசாவில் கைது செய்தவர் தான் இந்திரா காந்தி. நம்பூதிரி பாட் ஐந்து முறை கேரளாவில் முதலமைச்சராக இருந்த மார்ச்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் எமர்ஜென்சியை எதிர்த்து கலைஞர் கூட்டிய கூட்டத்திற்கு வந்து பேசியவர்.

ஸ்டாலின் மிசா

அப்பொழுது இருந்தவர்கள் பக்கா காங்கிரஸ்காரர்கள். இப்பொழுது சொக்கா காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்கள். இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியைப் குறித்து பின்னர் விரிவாக பேசலாம். அக்ட்டோபர் 2-ந் தேதி காமராஜர் இறந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அரசு மரியாதையுடன் கொட்டும் மழையில் நல்லடக்கம் செய்தார். இப்போது தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்கின்றனர்.
எங்களுடைய வழக்கறிஞர் மூலமாக அரசு ஆவண காப்பகத்தில் கேட்டபோது மிசா கைது பட்டியல் மூன்று நாட்களாக காணவில்லை என்று கூறுகிறார்கள்.

ஜெயலலிதா

இதே போல டான்சி நிலம் வாங்கிய டாக்குமெண்டை மறைத்ததால் தான், ஜெயலலிதா நான்கு ஆண்டு சிறை சென்றார் அது பப்ளிக் டாக்குமெண்ட். லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார், வாஜ்பாய் போன்றோர் மிசாவில் கைது செய்யப்பட்டவர்கள். லாலு பிரசாத் யாதவ் மிசாவில் கைது செய்யப்பட்டபோது தன் மகள் பிறந்ததால் அவருக்கு மிசா பாரதி என்று பெயர் வைத்தார்.

பெண்கள் பாதுகாப்பு

மக்கள் செய்த தவறால் ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள், பழித்துப் பேசாதீர்கள். சிங்கப்படை அமைத்தவர்கள் பெண் போலீசிடம் சிலிமிஷம் செய்கிறார்கள். தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது பாதுகாப்பில்லை விலைவாசி விண்னை முட்டுகிறது. மதுராந்தகம் தாராபுரம் இரண்டு தொகுதிகளும் வெற்றி நமக்கு கிடைக்கும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+