திமுகவை விஜய் கேட்டது 100% சரி.. ஆர்எஸ் பாரதி பேச்சுக்கு திமுக இதுவரை ஏன் கண்டிக்கல? யார்னு பாருங்க
சென்னை: மக்களை இழிவுபடுத்துபவர்கள், எதிர்க்கட்சி வரிசையில்தான் உட்கார வைக்கப்படுவார்கள்.. மக்களை இழிவாக பேசிய திமுக மூத்த தலைவர் பேச்சை, 24 மணி நேரமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கொண்டேயிருக்க வேண்டும்.. ஆர்எஸ் பாரதியின் அந்த பேச்சுக்கு தலைமையிடமிருந்து ஒரு கண்டிப்பு, மறுப்பு வரவில்லையே ஏன்? இந்த தவகெ மீது எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும்.. ஆனால் மக்களை ஏன் திமுக விமர்சிக்க வேண்டும்? என்று மூத்த பத்திரிகையாளர் மணி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
Prime9 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையளர் மணி, "தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய், நேற்று பதிலுரையில் மிகச் சரியாகவே பேசியிருக்கிறார்.. எந்த மொழியில் பேசினால் திமுகவுக்கு புரியுமோ, அந்த மொழியில்தான் பதில் சொல்ல முடியும்.. முதலமைச்சர் எது பேசினாலும், அதை குறை சொல்லக்கூடியதுதான் திமுக..

ஆர்எஸ் பாரதி பேச்சு
"ஓட்டுப்போடாதவங்களுக்கு நல்ல சாவு வராது" என்று ஆர்எஸ் பாரதி சொன்ன கருத்து சரியா? இந்த பேச்சுக்கு உதயநிதியிடமிருந்தோ, கட்சியிடமிருந்தோ, பொதுச்செயலாளரிடமிருந்தோ, ஒரேயொரு மறுப்பு, கண்டனம் இதுவரை வந்ததா?
இதற்கு முன்பு தோற்றுப்போன எந்த தலைவராவது, மக்களை பார்த்து இப்படி பேசியிருக்கிறார்களா? ஊடகங்களும் இதை கண்டுகொள்ளவில்லை.. பேசின ஆர்எஸ் பாரதியும் இதற்காக மன்னிப்பு கேட்கவில்லை.. மக்களை மோசமாக பேசினவரை விட்டுவிட்டு, அவர் பேசினதை சுட்டிக்காட்டுபவரான விஜய் மீது இப்போது பாய்வது ஏன்?
100 சதவீதம் விஜய் பேசியது சரி
பொதுக்கூட்டங்களில் பேசியதை ஏன் சட்டமன்றத்திற்குள் கொண்டு வருகிறீர்கள் என்று திமுக கேட்கிறது.. அப்படியானால் எங்கு வேண்டுமானாலும் எப்படியும் பேசுவதா? நாலு பேர் கூடுமிடத்தில், ஒரு மனிதன் எந்த இடத்திலுமே கண்ணியத்துடன்தான் பேச வேண்டும். எனவே திமுகவுக்கு விஜய் தந்துள்ள பதிலடி, 100 சதவீதம் சரியே. திமுகவை இப்படித்தான் ஹேண்டில் செய்ய வேண்டும்.
ஆனால், இதன் காரணமாக, தமிழக அரசின் செயல்பாடுகள் மறைந்துவிடுகிறது.. உதாரணத்துக்கு சட்டம் - ஒழுங்கு பிரச்சனை சீரியஸ் விஷயமாக மாறி கொண்டிருக்கிறது. இதில்தான் அரசு கவனம் செலுத்த வேண்டும்.. , திமுக, தவெக இருவருமே அதுகுறித்து விவாதிக்க வேண்டும்.. அதைவிட்டு, தவெக-திமுகவின் சண்டையை தீர்த்து கொள்ளும் இடமாக, பஞ்சாயத்து செய்யக்கூடிய இடமாக சட்டமன்றம் மாறக்கூடாது. மாநிலத்தின் நலன் சார்ந்து பேச வேண்டும்.
திமுக தலைமை ஏன் கண்டிக்கல?
அதேபோல ஆபாசமாகவோ தரக்குறைவான விமர்சனங்களை எங்கள் மீது வைக்காதீர்கள் என்கிறார் விஜய்.. முதலமைச்சர் இப்படி சொல்லியிருப்பது 100 சதவீதம் சரி.. திமுக செய்து கொண்டிருப்பது ஆபாசமான அவல நிலை.. எலும்பை உடைப்பேன் என்று திமுக நபர் ஒருவர் பேசுகிறார்.. "உங்களுக்கெல்லாம் நல்ல சாவு வராது" என்று பேசியதை திமுகவில் ஏன் யாருமே கண்டிக்கவில்லை?
மக்களை இழிவுபடுத்துபவர்கள், எதிர்க்கட்சி வரிசையில்தான் உட்கார வைக்கப்படுவார்கள்.. மக்களை இப்படி பேசிய பேச்சை, 24 மணி நேரமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கொண்டேயிருக்க வேண்டும்.. ஆர்எஸ் பாரதியின் அந்த பேச்சுக்கு தலைமையிடமிருந்து ஒரு கண்டிப்பு, மறுப்பு வரவில்லையே? இந்த தவகெ மீது எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும்.. ஆனால் மக்களை ஏன் விமர்சிக்கிறீர்கள்? என்றெல்லாம் மணி அந்த பேட்டியில் காட்டமாக கேள்விகளை எழுப்பி உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications
