ரூ.2000.. வங்கியில் 2000 ரூபாய் மாத்தினோமே.. இப்ப பாருங்க.. 9,760 கோடி.. ரிசர்வ் வங்கி போட்ட குண்டு
சென்னை: 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் ஒப்படைத்துவிட்ட நிலையில், இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்றை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் உத்தரவிட்டது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும், அதற்குள் அருகிலுள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இதையடுத்து, 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் வழங்கப்படுமா? என்று முன்பு, மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
நிதித்துறை: இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதிலளித்தபோது, இப்போதைய சூழலில்,2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த பரிசீலனை எதுவுமே அரிசிடம் இல்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார்.. இதற்கு பிறகு, அக்.7 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதனால், பொதுமக்களும், செப்டம்பர் 30க்குள் 2000 ரூபாயை மாற்ற தீவிரமானார்கள்..
இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை என்பதாலும், அதற்கும் மேல் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால், பான் விவரங்களை செலுத்தி ரூபாய் 50,000 வரை மாற்றிக்கொள்ள முடியும் என்பதாலும், கேஒய்சி-யை சரியாக செய்திருந்தால், எந்த கட்டுப்பாடுகளுமின்றி பணத்தை உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துகொள்ளலாம் என்பதாலும், எளிதாகவே வங்கிகளில் மாற்றினார்கள்.
ரிசர்வ் வங்கி: அதன் பிறகு டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம் உட்பட ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டும் இந்த வசதி கிடைத்து வருகிறது. இங்குள்ள ரிசர்வ் வங்கியின் கிளை அலுவலங்களில் வேலை நாட்களில், 2000 ரூபாய் நோட்டுகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
அன்று முதன்முதலாக, அதாவது கடந்த மே 19ம் தேதி, 2000 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப்பெறுவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்தபோது, அன்றை தினத்தில் ரூ3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.. ஆனால், நேற்று நவம்பர் மாதம் 30ம் தேதி நிலவரப்படி, இந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.26 சதவீதம் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பியிருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.
எதிர்பார்ப்பு: மிச்சம் ரூ.9,760 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பவில்லையாம்.. எனவே, அவை இன்னமும் எங்கேயோ முடங்கி கிடப்பதாக தெரிகிறது.. இந்த சுமார் ரூ9,500 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் தாள்கள் வங்கிகளுக்கு மறுபடியும் திரும்புமா? என்பது சந்தேகமாக இருக்கிறதாம்.
ஒருவேளை அவை கருப்பு பணமாக நிழலுலக நபர்களிடம் பதுங்கியிருக்கலாம் அல்லது முறைகேடான காரணத்தால் வெளியே புழக்கத்தில் இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், அந்த பணம் விரைவில் வங்கிக்கு வந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.. 2000 ரூபாய் நோட்டுகளில், ரூ.9,760 கோடி மதிப்பிலானவை, இன்னும் வங்கிகளுக்கு திரும்பாதது, பெரும் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications