ரூ.300 கோடி சென்னை கலாஷேத்ரா நிலம்.. பட்டா ஆவணங்கள், பவர் பத்திரம் பத்திரப்பதிவு! பதிவுத்துறை அதிரடி
சென்னை: போலி ஆவணங்களை கொண்டு சொத்து அபகரிப்பது நாளுக்கு நாள் பெருகி வருகிறது.. இதுபோன்ற குற்ற செயல்களுக்கு சிலசமயம் அரசு அதிகாரிகளே உடந்தையாக இருந்துவிடுகிறார்கள். இதனால் விஏஓ முதல் தாசில்தார் வரை பொதுவெளியில் அசிங்கப்பட்டு கைதாகி வந்தாலும்கூட, மோசடிகள் குறைவதில்லை. இதோ மத்திய அரசு நிலத்திலேயே ஒருவர் முறைகேடு செய்து அசிங்கப்பட்டுள்ளார்.. பொது அதிகார பத்திரம், போலி ஆவணம், பத்திரப்பதிவு செய்து அதிர வைத்துள்ளார் ஒரு சார்பதிவாளர்.
முதலில் ஜெனரல் அதிகார பத்திரம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். அதாவது, ஒரு வீடு அல்லது நிலத்தின் உரிமையாளர், தன்னால் செயல்படுத்த முடியாத அல்லது சரியாக பராமரிக்க முடியாத சொத்துக்களை, பிறருக்கு எழுதி தரும் அதிகாரம்தான், பவர் பத்திரம்.

நம்முடைய நிலத்தை இன்னொருவர் வந்து ஆக்கிரமிப்பு செய்யும்போது, இந்த பவர் பத்திரம் தேவைப்படும். பவர் பத்திரம் எழுதி தருபவர் முதன்மையாளர் என்றும், பவர் பத்திரம் பெறப்படுபவர் முகவர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
ஆனால், முதன்மையாளர், தன்னுடைய முகவருக்கு சில குறிப்பிட்ட அதிகாரங்களை தன் சார்பாக செயல்பட வழங்க முடியும்.. முதன்மையாளர் மட்டுமே பவர் பத்திரத்தில் கையெழுத்திடுவது அவசியமாக இருந்த நிலையில், பவர் பத்திரத்தில் முதன்மையாளர் கையெழுத்துடன் சேர்த்து, அவர் நியமிக்கும் முகவரும் கையெழுத்திடுவது இப்போது கட்டாயம் ஆகும்.
திருவான்மியூர் கலாசேஷத்ரா
இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு சொத்து பொது பத்திரம் வழங்கப்பட்டு, அது தொடர்பான நடவடிக்கையும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா என்ற அமைப்பானது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.. இந்த கலாஷேத்ரா அமைப்புக்கு 100 ஏக்கருக்கும் மேல் நிலம் உள்ளது. இதில், 2.62 ஏக்கர் நிலம் மட்டும் 1962ம் ஆண்டு முதல் ஒருவருக்கு சொந்தமானது என்று போலி ஆவணங்கள் மூலம் உரிமை கொண்டாடப்பட்டு, அந்த நிலம் ஒருவருக்கு பொது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொது அதிகார பத்திரம்
இந்த பொது அதிகாரத்தை சைதாப்பேட்டை சார்பதிவாளராக பணியாற்றிய ராஜசேகர் வழங்கியிருக்கிறார்.. ஆனால், அவர் இதை பதிவு செய்யும்போது ஆவணங்கள் எதையும் சரிபார்க்கவில்லை.. பட்டாவில் கலாஷேத்ரா பெயரும், நிலத்தின் உரிமையாளரின் பெயருமே இருந்திருக்கிறது. எனினும், இதை போலி ஆவணம் என்று உறுதிசெய்யாமல், பொது அதிகார பத்திரத்தை வழங்கியிருக்கிறார்.
அந்த பத்திரத்தை, பொது அதிகாரம் பெற்றவர், தற்போதைய சார்பதிவாளரிடம் விற்க முயலும்போதுதான், அது போலி ஆவணம் என்பது தெரியவந்துள்ளது.. இதனால், பத்திரத்தை பதிவு செய்ய முடியாமல் போயிற்று. இதுகுறித்து விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டதுடன், இது தொடர்பாக கமிட்டி அமைத்து, ஆய்வு செய்யவும் ஆணை பிறப்பித்திருந்தார்..
ஐஜி அமைத்த கமிட்டி
அதன்படியே ஐஜி அமைத்த கமிட்டியினர், இதுதொடர்பாக விசாரித்து, இந்த பதிவுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர் அந்த அறிக்கையில் முறைகேடு நடந்தது உண்மை என்று உறுதியானது.. எனவே, போலியான பதிவு செய்த சார்பதிவாளர் ராஜசேகரை சஸ்பெண்ட் செய்து ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்..
தற்போது ராஜசேகர், கோடம்பாக்கம் சார்பதிவாளராக பணியாற்றி வந்த நிலையில், அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, மத்திய அரசுக்கு சொந்தமான நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்ததால், ராஜசேகர் மீது போலீசில் புகார் செய்ய கலாஷேத்ரா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications