ரூ.500 கோடி, 15 சீட் சீமானுக்கு ரெடி! திமுகவோடு "அவங்க" சேர போறாங்க.. வேலு பேசிட்டிருக்கார்: பிரபலம்
சென்னை: நாம் தமிழர் சீமானை பாஜக - அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும், இதற்காக சீனியர் ஒருவரிடம் பொறுப்பு தந்திருப்பதாகவும் செய்திகள் ஏற்கனவே கசிந்திருந்தன. இந்நிலையில், பாஜக கூட்டணி வலிமையாக இருக்க போகிறது என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார். இதில் சீமான், மற்றும் தேமுதிக நிலைப்பாடு குறித்தும் திருச்சி சிவா தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
நம்முடைய ஒன்இந்தியா வெப்சைட்டிற்கு பிரத்யேக பேட்டி தந்துள்ள திருச்சி சூர்யா, "பாஜகவுடன் பேசி முடிச்சிட்டாரு சீமான்.. ஒருவேளை அதிமுகவுடன் சீமான் கூட்டணி வைத்து கொண்டால், அவர் தன்னுடைய மீசையை எடுத்து கொள்வாரா? பேச்சுவார்த்தை அனைத்தும் அவர்களுக்குள் முடிந்துவிட்டது.

இந்த தேர்தலில் விஜய் அரசியலில் இறங்கியிருப்பதால், இப்போதைக்கு 8 சதவீதத்தில் உள்ள சீமானின் வாக்கு சதவீதம், குறைய போகிறது.. தங்களுடைய வாக்கு வங்கி, விஜய்யால் மோசமாக அடிவாங்கும் என்பதை சீமானே உணர்கிறார்.. வரும் தேர்தலில் நாம் தமிழர் வெறும் 3 சதவீதம் வாக்கு வங்கியை பெற்றால், யாராவது அந்த கட்சியை மதிப்பார்களா?
15 எம்எல்ஏ சீட்டுகள்
எனவே தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனநிலைமைக்கு சீமான் வந்துவிட்டார். எனவே, சீமானுக்கு ரூ.500 கோடி பேசி முடித்தாகிவிட்டது. 15 எம்எல்ஏ சீட்டுகளும் நாம் தமிழர் கட்சிக்கு பேசியாகிவிட்டது.
234 தொகுதிக்கும் வேட்பாளரை போட்டதாக சொல்றாரே சீமான்? இதுவரை 2 தொகுதிக்குதான் வேட்பாளரை நியமித்திருக்கிறார் . ஒன்று, இடும்பாவனம் கார்த்தி, இன்னொருத்தர் ஒரு கல்யாண மாப்பிள்ளை.. அதாவது, கல்யாணத்துக்கு போன சீமான், மாப்பிளை இவ்ளோ வெயிட்டா இருக்கிறாரே என்பதை கவனித்து உடனே அவருக்கு சீட் ஒதுக்கிவிட்டார்.
நிர்மலா சீதாராமன் - சீமான்
நிர்மலா சீதாராமனை தான் சந்திக்கவேயில்லை என்கிறார் சீமான். ஆனால், "அண்ணன் என்மீது கோபித்து கொண்டாலும் பரவாயில்லை, நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்தது உண்மைதான்" என்று அடுத்த நாளே சொல்கிறார் சாட்டை துரைமுருகன்.. இந்த சந்திப்பை உளவுத்துறையும் உறுதிப்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்ல, விஜய்க்கு என்ன பாதுகாப்பு தரப்பட்டுள்ளதோ, அதே பாதுகாப்பை சீமானுக்கும் வழங்குவதற்கு மத்திய அரசின் ஒப்புதலும் தயாராக உள்ளது..
திமுக தரப்பிலிருந்து சீமானுக்கு வைக்கப்படும் ஒரே செக் பாலியல் வழக்குதான்.. அதையும் சுப்ரீம் கோர்ட் ஸ்டே தந்துவிட்டது. எனவே, இது திமுகவுக்கு பின்னடைவு.. எழுதி வைத்து கொள்ளுங்கள், வரும் 2026 தேர்தலில் சீமான் பாஜகவுக்கு ஓட்டு கேட்க போகிறார்.. இன்னைக்கு உதயநிதி, ஸ்டாலினை, ராகுல் காந்தியை கேள்வி கேட்கும் சீமான், ஒருநாளும் பாஜக, அதிமுகவை விமர்சிக்கவில்லையே? இதுக்கு என்ன காரணம்?
அன்புமணி - பாமக
அதேபோல பாமகவை பொறுத்தவரை, திமுகவுடன் போகவே ராமதாஸ் விருப்பப்படுகிறார்.. ஆனால், அதிமுக-பாஜக கூட்டணிக்கு போக அன்புமணி விருப்பப்படுகிறார்.. இதே நிலைப்பாட்டில் அன்புமணி இருந்தால், கட்சி நாளை தனக்கே சொந்தம் என்று அன்புமணி சொல்ல நேரிடும். அப்போது அன்புமணிக்கு ஆதரவாக பாஜக இருந்து, பாமக கட்சியையும், அன்புமணியிடமே ஒப்படைக்கும்.
அத்துடன், கட்சி அன்புமணிக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையமும் முடிவெடுத்து தரும்.. அப்போது ராமதாஸ் வேறு வழியின்றி அதிமுகவுடன் சேர்ந்துதான் ஆக வேண்டும். ஆக, அதிமுக + பாஜக + நாம் தமிழர் + பாமக இந்த நான்குமே கூட்டணியில் ஒன்றுசேரும்.
தேமுதிக 2 ஆப்ஷன்
தேமுதிகவை பொறுத்தவரை கூட்டணியில் 2 ஆப்ஷன்கள் உள்ளன-. ஒன்று திமுக, மற்றொன்று தவெக.. இதில் தவெகவை கடைசி ஆப்ஷனாகவே வைத்திருக்கிறார்கள். எனவே, திமுகவிலிருந்து எவ வேலு பிரேமலதாவிடம் கூட்டணிக்காக பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், பிரேமலதாவுக்கு ராஜ்ய சபா தரவில்லை என்று ஏற்கனவே பாஜக மீது கோபத்தில் உள்ளதால், வரும் ஜூலையில், தங்களுக்கு ராஜ்ய சபா வேண்டும் என்று திமுகவிடம் கேட்டுவருகிறார்.. முதலில் 10 சீட்டில் ஜெயித்து விட்டு வாருங்கள், ராஜ்ய சபா சீட் நிச்சயம் தரப்படும் என்றும் தேமுதிகவிடம் திமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.
தேமுதிக - ராஜ்ய சபா சீட்
பிரேமலதாவை பற்றி கருத்து சொன்னால், உடனே எங்கள் அண்ணியாரை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று என்னை கேட்கிறார்கள்.. விஜயகாந்த் தாலி கட்டினார் என்ற ஒரே தகுதியில் பிரேமலதாவை தேமுதிக தலைவராக்கியிருக்கிறார்கள். அப்படின்னா யாருமே கருத்து சொல்லக்கூடாதா? அப்படி இவர்களுக்கு தகுதி இருக்கிறதென்றால், எடப்பாடியிடம் ராஜ்ய சபா சீட் வாங்கி காட்டியிருக்க வேண்டியதுதானே?
எடப்பாடி பழனிசாமி எப்போதுமே ராஜ்யசபா சீட்டை பிரேமலதாவுக்கு தர மாட்டார் என்று ஏற்கனவே நான்தான் முதலில் சொன்னேன்.. அதன்படியே கடைசிவிரை எடப்பாடி சீட் தரவேயில்லை.. அங்கிருந்து வெளியே வந்தபிறகும் தேமுதிகவை எடப்பாடி சட்டை செய்யவேயில்லை. அதனால்தான், தேமுதிகவுக்கு திமுக, தவெக என்ற இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளது.
விசிக - பாமக
விசிகவை பொறுத்தவரை, பாமக கட்சி ராமதாஸ் கைக்கு வந்து, ஒருவேளை ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி சேர நேர்ந்தால், திமுகவிலிருந்து விசிக வெளியேறும்.. விசிகவா? பாமக? என்று இரண்டு சாய்ஸை ஸ்டாலினிடம் வைத்தால், அவர் பாமகவைதான் தேர்ந்தெடுப்பார்..
இதற்கு நடுவில் வேல்முருகனும் அதிமுகவுக்கு செல்கிறார்.. பண்ருட்டி தொகுதியில் விசிகவின் வாக்குகள் அதிகம். அதனால்தான், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. தன்மீது திமுக கடுங்கோபத்தில் உள்ளது என்பது வேல்முருகனுக்கும் தெரியும். அதனால், எம்எல்ஏ சீட் தந்தாலும், தன்னை தோற்கடித்து விடுவார்கள் என்பதையும் வேல்முருகன் உஷாராக புரிந்துகொண்டுள்ளார். எனவேதான், சட்டசபையில் எடப்பாடியை வாழ்த்தி பேசிய நிகழ்வுகள் நடந்தன..
நயினார் நாகேந்திரன்
அதேபோல, எடப்பாடி பழனிசாமி ஆயிரம் பேசலாம். ஆனால், அமித்ஷா எடுப்பதுதான் முடிவு.. பிறகு, அதிமுகவிடம் சரிசமமாக சீட் கேட்பார்.. அல்லது துணை முதலமைச்சர் பதவியையாவது கேட்பார்கள்.. நயினார் நாகேந்திரன் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர், ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.. எனவே அவர் துணை முதல்வராக இருக்கட்டும், அதேபோல, கவுண்டர் சமூகத்திலிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கட்டும் என்று பாஜக தரப்பில் சொல்லப்படும்.
ஓபிஎஸ் - தினகரன்
ஓபிஎஸ், சசிகலா, தினகரன் இவர்களை எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. தற்போது டெல்லியே ஓபிஎஸ்ஸை கைவிட்டுவிட்டது.. அதனால் ஓபுஎஸ் புது கட்சி துவங்க போகிறார்.
அமித்ஷாவின் சென்னை வருகைக்கு முன்பு, அண்ணாமலை குருமூர்த்தியை நேரில் சந்தித்து பேசினார்.. அப்போது பேசியபோது, ஓபிஎஸ், டிடிவியை மட்டும் நாம் கைவிட்டுவிடக்கூடாது. 2024-ல் நமக்காக உறுதுணையாக இருந்தவர்கள், எடப்பாடிக்காக அவர்களை கைவிடக்கூடாது என்றெல்லாம் அண்ணாமலை பரிந்து பேசியிருக்கிறார். அதேபோல, அமித்ஷா வருகையின்போது, ஓபிஎஸ், தினகரனையும் மேடைமயில் பங்கேற்க செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை குருமூர்த்தியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications